spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாமிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான கவினின் 'ஸ்டார்'..... முதல் நாள் வசூல் விபரம்!

மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான கவினின் ‘ஸ்டார்’….. முதல் நாள் வசூல் விபரம்!

-

- Advertisement -

நடிகர் கவின் டாடா படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு ஸ்டார் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இளன் இயக்கியுள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான கவினின் 'ஸ்டார்'..... முதல் நாள் வசூல் விபரம்!ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்த நிலையில் யுவன் சங்கர் ராஜா இவருக்கு இசையமைத்திருந்தார். இந்த படத்தில் கவின், லால், கீதா கைலாசம், பிரீத்தி முகுந்தன், ஆதிதி பொஹங்கர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. கனவுகளை நோக்கி ஓடும் இளைஞர்கள் வாழ்க்கையில் ஏற்படும் பல சிக்கல்களைத் தாண்டி எப்படி தனது கனவை நனவாக்கி காட்டுகிறார்கள் என்பதை எதார்த்தமாகவும் எமோஷனலாகவும் காட்டியிருக்கிறார் இயக்குனர் இளன். மேலும் இந்த படத்தில் நடிகர் கவினின் நடிப்பு பெரிதளவும் பேசப்படுகிறது. அதே சமயம் நடிகர் லால் இந்த படத்திற்கு முதுகெலும்பாக விளங்குகிறார். யுவன் சங்கர் ராஜாவின் இசையும் படத்திற்கு பக்கபலமாக அமைந்துள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான கவினின் 'ஸ்டார்'..... முதல் நாள் வசூல் விபரம்!இவ்வாறு பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுகளை பெற்று வரும் ஸ்டார் திரைப்படம் முதல் நாளில் மட்டுமே 3 கோடி வரை வசூல் செய்துள்ளதாக அப்டேட் கிடைத்துள்ளது. கோடை விடுமுறை என்பதால் இனி வரும் நாட்களிலும் படத்தின் வசூல் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.

MUST READ