spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவெற்றிமாறன் – சிம்பு கூட்டணியில் உருவாகும் “அரசன்”- படப்பிடிப்பு தேதியை அறிவித்த சிம்பு…

வெற்றிமாறன் – சிம்பு கூட்டணியில் உருவாகும் “அரசன்”- படப்பிடிப்பு தேதியை அறிவித்த சிம்பு…

-

- Advertisement -

அரசன் திரைப்படத்தின் படப்பிடிப்பு வருகின்ற டிசம்பர் 9-ம் தேதி தொடங்க உள்ளதாக நடிகர் சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.வெற்றிமாறன் – சிம்பு கூட்டணியில் உருவாகும் “அரசன்”- படப்பிடிப்பு தேதியை அறிவித்த சிம்பு…

மலேசியாவில் நடைபெற்ற தனியார் நகைக்கடை திறப்பு விழாவில் கலந்துகொண்ட நடிகர் சிலம்பரசன் (சிம்பு), அங்கு ரசிகர்கள் மத்தியில் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டார். நீண்டநாள் எதிர்பார்ப்பில் இருந்த வெற்றிமாறன் – சிம்பு கூட்டணியில் உருவாகும் “அரசன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு வருகின்ற டிசம்பர் 9 ஆம் தேதி தொடங்கும் என தெரிவித்துள்ளார்.

we-r-hiring

வெற்றிமாறன் இயக்கத்தில், சிம்பு இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்பதில் ரசிகர்கள் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்பதும் கூடுதல் சிறப்பாகும்.

வடசென்னை பின்னணியில் உருவாகவுள்ள இந்த திரைப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு மதுரையில் டிசம்பர் 9ஆம் தேதி ஆரம்பமாகிறது. ஏற்கெனவே பல மாதங்களாக உருவாகாமல் இருந்த சிம்பு படத்தின் தொடக்க தகவல் வெளியாகியுள்ளதால், ரசிகர்கள் சமூக ஊடகங்களில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அடுத்த தலைமுறை இயற்கையின் பக்கம் திரும்ப வேண்டும் – நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் வேண்டுகோள்

MUST READ