கண்ணுக்குத் தெரியாத கடவுளை கும்பிடுகிறோம், ஆனால் கண்ணுக்கு தெரிந்த இயற்கையை அழித்து வருவதாக வேதனை தெரிவித்துள்ள உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் அடுத்த தலைமுறை இயற்கையின் பக்கம் திரும்ப வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தின் சார்பில், சென்னை கலைவாணர் அரங்கில் சுற்றுச்சூழல் தொடர்பான கருந்தரங்கு நடைபெற்று வருகிறது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த கருத்தரங்கு தொடக்கவிழாவில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், அரவிந்த்குமார், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மணீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா, தமிழ்நாடு சுற்றுச்சூழல் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தேசிய பசுமை தீர்ப்பாய தலைவர் பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா, தென்மண்டல பசுமை தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, “தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முன்னணி மாநிலமாக உள்ளது என்றும், சுற்றுச்சூழல் என்பது தமிழக கலாச்சாரத்துடன் ஒன்றிணைந்தது என்றும் குறிப்பிட்டார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் ஒருங்கிணைப்பு மற்றும் சட்ட பாதுகாப்பு தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், இந்தியாவில் மிக நீளதான கடற்கரை கொண்ட தமிழகத்தில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கடல்சார் மேலாண்மை மற்றும் ஆய்வுகள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது“ என தெரிவித்தார்.

விழாவில் பேசிய உச்ச நீதிமன்ற நீதிபதி எம் எம் சுந்தரேஷ், “அடுத்த தலைமுறை இயற்கையின் பக்கம் திரும்ப வேண்டும் என்பதை சிந்திக்க வேண்டும், நாம் கண்ணுக்குத் தெரியாத கடவுளை கும்பிடுகிறோம். ஆனால் கண்ணுக்கு தெரிந்த இயற்கையை அழித்து வருவதாக வேதனை தெரிவித்தார்.சங்க இலக்கியங்களான சிலப்பதிகாரம், திருக்குறள், கம்பராமாயணம் ஆகியவற்றில் இயற்கையை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், தாய் பாலுக்கு சமமானது தண்ணீர் என்றும், இயற்கையை குறித்து நாம் என்ன புரிந்து கொண்டிருக்கிறோம் என்பதை தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம் என்றும் குறிப்பிட்டார்.
திருப்பூரில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சுற்றுச்சூழல் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது, மலை போல சாயக்கழிவுகள் கழிவுகள் உள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து நமக்கு எதுவும் தெரியவில்லை. அங்குள்ள சாய கழிவு பட்டறைகளில் வேலைபார்க்கும் கடுமையான உடல்நல பாதிப்புக்கு ஆளாகியுள்ளார்கள் எனவும் தெரிவித்தார்.
உண்மையான வளர்ச்சி எது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் கடல் காடுகளின் முக்கியத்துவம் குறித்து புரிந்து கொள்ள வேண்டும், பருவநிலை மாற்றத்தால் உலகம் முழுவதும் பல கோடி ரூபாய் பணம் வீணாகிறது, பருவநிலை மாற்றத்தால் பல இழப்புகளை சந்தித்து வருவதாகவும் குறிப்பிட்டார். இந்த கருத்தரங்கில் வழக்கறிஞர்கள் சட்டக் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தனர்.
தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த ராணுவவீரா்… அரசு மரியாதையுடன் நல்லடக்கம்…


