Homeசெய்திகள்தமிழ்நாடு151 மருத்துவ சீட்டுகள்.. தமிழகத்திற்கு நேர்ந்த சிக்கல்? உச்ச நீதிமன்றம் கொடுத்த முக்கிய அப்டேட்!

151 மருத்துவ சீட்டுகள்.. தமிழகத்திற்கு நேர்ந்த சிக்கல்? உச்ச நீதிமன்றம் கொடுத்த முக்கிய அப்டேட்!

-

- Advertisement -

தமிழகத்தில் காலியாக உள்ள 151 உயர்சிறப்பு (Super Speciality) மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களை அகில இந்திய தொகுப்புக்கு (All India Quota) ஒப்படைப்பது தொடர்பான விவகாரத்தில், இந்திய மருத்துவ அதிகாரிகள் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்டுள்ளது. மனுதாரர் தரப்பின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், இந்த வழக்கு விரைவில் விசாரணைக்குப் பட்டியலிடப்படும் என்று உறுதியளித்துள்ளது.151 மருத்துவ சீட்டுகள்.. தமிழகத்திற்கு நேர்ந்த சிக்கல்? உச்ச நீதிமன்றம் கொடுத்த முக்கிய அப்டேட்!

உச்ச நீதிமன்றத்தில் அவசர முறையீடு
தமிழக மருத்துவக் கல்வி இயக்ககத்தின் கீழ் காலியாக உள்ள 151 உயர்சிறப்பு மருத்துவ இடங்களை அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு வழங்குவது தொடர்பாக, நீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய உத்தரவில் உரிய மாற்றங்களைச் செய்யக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்விவகாரத்தை விரைவாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று இந்திய மருத்துவ அதிகாரிகள் சங்கம் சார்பில் மூத்த வழக்கறிஞர், உச்ச நீதிமன்ற நீதிபதி பி.எஸ். நரசிம்மா தலைமையிலான அமர்வு முன்பாக அவசரமாக முறையீடு செய்தார்.

we-r-hiring

மருத்துவ வட்டாரத்தில் எதிர்பார்ப்பு
வழக்கறிஞரின் அவசரக் கோரிக்கையைப் பரிசீலித்த நீதிபதிகள் அமர்வு, இந்த மனு விரைவில் விசாரணைக்குப் பட்டியலிடப்படும் என்று தெரிவித்தது. உயர்சிறப்பு மருத்துவ இடங்கள் தொடர்பான இந்த சட்டப் போராட்டம், தமிழக மருத்துவ மாணவர்கள் மற்றும் மருத்துவ வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பையும் உற்றுநோக்கலையும் ஏற்படுத்தியுள்ளது.

முதல்வர் விஜய்க்கு மிரட்டல் விடுத்த வழக்கு: விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

MUST READ