Homeசெய்திகள்தமிழ்நாடுபுதிய தலைமைச் செயலகம் கட்ட டெண்டர் இல்லை; முதல்வர் அறை புதுப்பிப்புக்கு ரூ.6 கோடியா? -...

புதிய தலைமைச் செயலகம் கட்ட டெண்டர் இல்லை; முதல்வர் அறை புதுப்பிப்புக்கு ரூ.6 கோடியா? – நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி!

-

- Advertisement -

இரண்டு இடைத்தேர்தல்களிலும் கூட்டணி வெற்றிக்காக பாஜக முழு முயற்சியுடன் செயல்படும்.புதிய தலைமைச் செயலகம் கட்ட டெண்டர் இல்லை; முதல்வர் அறை புதுப்பிப்புக்கு ரூ.6 கோடியா? - நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி!

லண்டன் பயணம் வெற்றி என்றால் எந்த நிறுவனம் எவ்வளவு முதலீடு செய்கிறது என்பதை அரசு வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். பிரதமர் மோடியின் 76-வது பிறந்தநாளை முன்னிட்டு ராயபுரம் அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிப்பு.

we-r-hiring

சென்னை ராயபுரம் அரசு மருத்துவமனையில் பிரதமர் நரேந்திர மோடியின் 76-வது பிறந்தநாளை முன்னிட்டு பாஜக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பாஜக இளைஞரணி மாநிலத் தலைவர் டாக்டர் எஸ்.ஜி.சூர்யா உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது, மருத்துவமனையில் இன்று பிறந்த அனைத்து பச்சிளம் குழந்தைகளுக்கும் தங்க மோதிரங்கள் அணிவிக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக அரசு மற்றும் அரசியல் நிலவரங்கள் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளையும் கேள்விகளையும் எழுப்பினார்.

தலைமைச் செயலகம் மற்றும் முதலமைச்சர் அறை புதுப்பிப்பு
சென்னையில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு குறித்துப் பேசிய அவர், மீனவர்கள் அதிகம் வசிக்கும் மற்றும் அதிக போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியில் தலைமைச் செயலகம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்றார்.

மேலும், “ரூ.1,500 கோடி மதிப்பில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்போவதாகச் சொல்கிறார்கள்; ஆனால் இதுவரை அதற்கான வரைபடமும் இல்லை, டெண்டரும் இல்லை” எனத் கடுமையாக விமர்சித்தார்.

புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட உள்ள நிலையில், முதலமைச்சரின் அறையை மட்டும் ரூ.5 முதல் ரூ.6 கோடி வரை செலவு செய்து புதுப்பிப்பது ஏன் என கேள்வி எழுப்பிய அவர், ஊழலற்ற ஆட்சி என்று கூறிவிட்டு இங்கிருந்தே ஊழல் தொடங்குவதாகவும் குற்றம்சாட்டினார்.

மேலும், மேட்டூர் அணையைத் திறக்க நேரில் செல்வதற்கு ரூ.5 கோடி வரை செலவு செய்வதைத் தவிர்த்து, சென்னையில் இருந்தபடியே காணொலி வாயிலாகத் திறக்கலாமே என்றும் குறிப்பிட்டார்.

லண்டன் பயணம் குறித்து வெள்ளை அறிக்கை தேவை
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் லண்டன் சென்றது குறித்த கேள்விக்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், “லண்டன் பயணம் வெற்றி என்கிறார்கள்; ஆனால் எந்த நிறுவனம், எவ்வளவு முதலீடு செய்கிறது என்பதை அரசு வெள்ளை அறிக்கையாகச் சொல்ல வேண்டும்” என்றார்.

சென்னையில் அசோக் லேலண்ட் போன்ற நிறுவனங்கள் இருக்கும்போது, இதற்காக லண்டன் செல்ல வேண்டிய அவசியம் என்னவென்று கேள்வி எழுப்பிய அவர், EY GDS போன்ற நிறுவனங்கள் முதலீட்டு நிறுவனங்கள் கிடையாது என்பதையும் சுட்டிக்காட்டினார்.

இடைத்தேர்தல் மற்றும் கூட்டணி நிலைப்பாடு
தமிழகத்தில் நடைபெற உள்ள இரண்டு இடைத்தேர்தல்கள் குறித்துப் பேசிய அவர், அத்தேர்தல்களில் பாஜக தனது பங்களிப்பை முழுமையாகச் செய்யும் என்றும், தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றிக்காகத் தீவிரமாகப் பாடுபடும் என்றும் தெரிவித்தார்.

பாமகவுக்கு கூட்டணியில் வழிவகை செய்யப்படுமா என்ற கேள்விக்கு, அதற்கான ஏற்பாடுகளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்வார் எனப் பதிலளித்தார்.

மேலும், முன்னாள் அமைச்சர் வீட்டில் நடைபெற்ற அமலாக்கத்துறை அல்லது லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைகள் குறித்த கேள்விக்கு, அந்தச் சோதனைகள் அனைத்தும் பழிவாங்கும் நோக்கத்துடன் நடைபெறுவதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

தலைமைச் செயலகத்தில் சமூகநீதி உறுதிமொழி ஏற்றார் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்!

MUST READ