Homeசெய்திகள்தமிழ்நாடுமதர்சன் நிறுவன ஒப்பந்தத்தில் மர்மம்: "சென்னையில் கிளை உள்ளபோது லண்டனில் ஒப்பந்தம் போடப்பட்டதன் நோக்கம் என்ன?"...

மதர்சன் நிறுவன ஒப்பந்தத்தில் மர்மம்: “சென்னையில் கிளை உள்ளபோது லண்டனில் ஒப்பந்தம் போடப்பட்டதன் நோக்கம் என்ன?” எடப்பாடி பழனிசாமி கேள்வி…

-

- Advertisement -

மதுரையில் இன்று (செப்டம்பர் 17, 2026) செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்தார். குறிப்பாக, முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம் மற்றும் மாநிலத்தில் நிலவும் மின்தடை விவகாரங்களை முன்வைத்து அவர் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.மதர்சன் நிறுவன ஒப்பந்தத்தில் மர்மம்: "சென்னையில் கிளை உள்ளபோது லண்டனில் ஒப்பந்தம் போடப்பட்டதன் நோக்கம் என்ன?" எடப்பாடி பழனிசாமி கேள்வி...

லண்டன் பயணம்: தொழில் முதலீடா அல்லது இன்பச் சுற்றுலாவா?

செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி, தமிழக முதல்வர் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டன் சென்றிருந்ததைக் குறிப்பிட்டுப் பேசுகையில், “தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காகச் சென்ற முதலமைச்சர், சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சரையோ அல்லது தொழில்துறை செயலாளரையோ அழைத்துச் செல்லவில்லை. துறை சார்ந்த அதிகாரிகளைத் தவிர்த்துவிட்டு, சம்பந்தமில்லாத அதிகாரிகளை அழைத்துச் சென்று முதலீடுகளை ஈர்த்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் உண்மையில் தொழில் முதலீட்டை ஈர்க்கச் சென்றாரா, அல்லது இன்பச் சுற்றுலா போயிருக்கிறாரா என்று மக்கள் கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளது” என்றார்.

we-r-hiring

தொடர்ந்து பேசிய அவர், இந்தியாவில் சுமார் 32 இடங்களில் மதர்சன் நிறுவனம் செயல்பட்டு வருவதாகவும், சென்னையில் கூட அதற்கு அலுவலகம் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார். “தமிழகத்திலேயே கிளை அலுவலகம் இருக்கும்போது, லண்டன் சென்று அந்த நிறுவனத்தோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டதன் நோக்கம் என்ன? இதற்கு முதலமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும்” என்றும் அவர் கோரினார்.

மின்வெட்டு விவகாரமும் முரண்பட்ட அமைச்சரின் பேச்சும்

தமிழகத்தில் தற்போது நிலவிவரும் கடுமையான மின்வெட்டுப் பிரச்சினை குறித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்களின் மறுப்புரைகளைக் கடுமையாக சாடினார். “தமிழகத்தில் மின்வெட்டே இல்லை என்று அமைச்சர்கள் கூறுகிறார்கள். ஆனால், கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள், திருமாவளவன் கலந்துகொண்ட நிகழ்ச்சி, கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் கலந்துகொண்ட நிகழ்வு, மற்றும் வருவாய்த் துறை அமைச்சர் பேட்டி கொடுத்துக்கொண்டிருக்கும்போதுகூட திடீரென்று மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இதெல்லாம் மின்வெட்டு இருப்பதற்கு அத்தாட்சியான சாட்சிகள்” என்றார்.

மேலும், “மின்வெட்டு இல்லை என்று சொல்லிக்கொண்டே, மறுபுறம் மின்சாரத்துறை அமைச்சர் தமிழகத்தில் மின்சாரப் பற்றாக்குறை இருப்பதாகவும், அதனை ஈடுகட்ட வெளிச்சந்தையில் இருந்து 2000 மெகாவாட் மின்சாரம் வாங்கப்பட உள்ளதாகவும் குறிப்பிடுகிறார். அப்படி தமிழகத்தில் மின்வெட்டு இல்லையென்றால், எதற்கு வெளிச்சந்தையில் இருந்து இவ்வளவு பெரிய அளவில் மின்சாரத்தை வாங்க வேண்டும்?” என்று கேள்வி எழுப்பினார்.

“மக்களின் தூக்கத்தைத் தொலைத்த அரசு”

எதார்த்தமான நிலையை மறைக்காமல் அரசு செயற்பட வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், இரவில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டால் பொதுமக்கள் நிம்மதியான தூக்கத்தைத் தொலைத்துத் தவிப்பதாகக் கூறினார். இனியாவது அரசு விழித்துக்கொண்டு மக்களுக்குத் தடையற்ற மின்சாரத்தை வழங்கத் தேவையான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.

மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு சிறப்பாக நடந்தது! “யாரையும் புறக்கணிக்கவில்லை” – அமைச்சர் ரமேஷ் விளக்கம்

MUST READ