spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாரியோவின் அடுத்த அதிரடி” ராம் in லீலா” படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்!

ரியோவின் அடுத்த அதிரடி” ராம் in லீலா” படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்!

-

- Advertisement -

நடிகர் ரியோவின் ராம் in லீலா என்ற புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.ரியோவின் அடுத்த அதிரடி” ராம் in லீலா” படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்!

டிரைடன்ட் ஆர்ட்ஸ் மற்றும் ஐவா என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் ஆர். ரவீந்திரன் மற்றும் சுதர்சன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் புதிய ரொமான்டிக் காமெடி திரைப்படத்திற்கு’ ‘ராம் in லீலா’ என பெயரிடப்பட்டிருக்கிறது. சென்னையில் நடைபெற்ற இப்படத்தின் தொடக்க விழாவிற்கு நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலரும் வருகை தந்து படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

we-r-hiring

இயக்குநர் ராமச்சந்திரன் கண்ணன் இயக்கத்தில் தயாராகும் ‘ராம் in லீலா ‘ எனும் திரைப்படத்தில் ரியோ , வர்திகா, நயனா எல்சா, மா. கா. பா. ஆனந்த், சேத்தன், முனிஸ்காந்த், மாளவிகா அவினாஷ், தீபா வெங்கட், சண்டை பயிற்சி இயக்குநர் சூப்பர் சுப்பராயன் ஆகியோர் முக்கியமான வேடங்களில் நடிக்கிறார்கள். மல்லிகார்ஜுன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு அங்கித் மேனன் இசையமைக்கிறார்.

விஜயிடம் பேசும் திமுக அமைச்சர்கள்? தந்தி டிவியில் அம்பலப்பட்ட ஆதவ்! ஜீவசகாப்தன் நேர்காணல்!

MUST READ