spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைவிஜயிடம் பேசும் திமுக அமைச்சர்கள்? தந்தி டிவியில் அம்பலப்பட்ட ஆதவ்! ஜீவசகாப்தன் நேர்காணல்!

விஜயிடம் பேசும் திமுக அமைச்சர்கள்? தந்தி டிவியில் அம்பலப்பட்ட ஆதவ்! ஜீவசகாப்தன் நேர்காணல்!

-

- Advertisement -

ஆதவ் அர்ஜுனா, தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் பாஜகவினுடைய மீடியேட்டராக செயல்படுகிறார் என்பது வெளிப்படையாக தெரிவதாக ஊடகவியலாளர் ஜீவசகாப்தன் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

தனியார் தொலைக்காட்சிக்கு ஆதவ் அர்ஜுனா அளித்த பேட்டி குறித்து ஊடகவியலாளர் ஜீவசகாப்தன் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- தவெக தேர்தல் பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, தந்தி தொலைக்காட்சிக்கு நேர்காணல் ஒன்றை அளித்துள்ளார். அதில் செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி என மூன்று பேரையும் தலைவராக ஏற்றுக்கொண்டவர், அதிமுகவை அடகு வைத்துவிட்டதாக விஜய் சொன்ன எடப்பாடி பழனிசாமியின் அமைச்சரவையில இடம்பெற்றவர், தவெகவில் சேர்ந்ததும் அவர் நல்லவர் ஆகிவிட்டாரா?

அப்போது, நேற்று வரை இரண்டு திராவிட கட்சிகளுக்கு மாற்று நாங்கள் தான் என்று சொல்வது, ஊழல் எதிர்ப்பு என்பது எல்லாம் அடிபட்டு போகிறது. அப்போது விஜயின் ஊழல் பட்டியலில் அதிமுக வராது. அதிமுக ஊழல் அற்ற கட்சி? செங்கோட்டையன் ஊழல் அற்றவர் என்று ஆதவ் அர்ஜுனா சொல்கிறாரா? என்கிற கேள்வி எழுகிறது. ஆனால் இவை எதற்கும் பதில் இல்லை. அவரால் செங்கோட்டையன் ஊழல் அற்றவர் என்றும் சொல்ல முடியவில்லை. ஆமாம் ஊழல்வாதிதான். அப்படி இருந்தாலும் நாங்கள் சேர்த்துக்கொள்கிறோம் என்றும்  சமாளிக்கவும் முடியவில்லை.

ஒரு வாரத்துக்கு முன்பு வரை அமித்ஷா சொல்லிதான் நான் எல்லாவற்றையும் செய்கிறேன் என்று சொன்னவர் செங்கோட்டையன். இந்த செங்கோட்டையனை வைத்துக்கொண்டு தான் டெல்லியை எதிர்க்க போகிறீர்களா? பாஜக தான்,தன்னை இயக்குகிறது என்று சொன்ன செங்கோட்டையனை பக்கத்தில் வைத்துக்கொண்டு, இனிமேல் பாஜகவை கொள்கை எதிரி என்று விஜய் எப்படி சொல்வார்? விஜயின் குடுமி அமித்ஷாவிடம் உள்ளது என்றும், அவரை இயக்குவது டெல்லி தான் என்றும் மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே. சொல்கிறார். இல்லாவிட்டால் பாஜக அனுப்பிய செங்கோட்டையனை எப்படி கட்சியில் சேர்ப்பார்கள்?

ஆதவ் அர்ஜுனா, திமுகவை தவிர்த்து அனைத்துக்கட்சிகளுடனும் கூட்டணிக்கு செல்வதாக சொல்கிறார். அப்போது அதிமுக உடனும் கூட்டணிக்கு செல்ல தயார் என்று அவர் சொல்கிறார். ஜனவரிக்கு பிறகுதான் இவர்கள் யாருடன் செல்கிறார்கள் என்பது தெரியும். ஆதவ் அர்ஜுனா, எஸ்.ஐ.ஆர் குறித்தோ, வாக்கு திருட்டு குறித்தோ ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அவருக்கு பாஜக ஒரு பிரச்சினையே இல்லை. காரணம் அவரே பாஜகவினுடைய ஆள்தான். ஆதவ் அர்ஜுனா, பாஜகவினுடைய மீடியேட்டராக செயல்படுகிறார் என்பது, அவருடைய பேட்டியில் வெளிப்படையாக தெரிகிறது.

ஆதவ் அர்ஜுனா,  தன்னுடைய பேட்டியில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வந்தால் ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், திமுகவின் 2 அமைச்சர்கள் தங்களுடன் பேசிக் கொண்டிருப்பதாகவும் சொல்கிறார். இதுதான் தவெக-வின் பாணி. எதுவும் நடக்காவிட்டாலும், அது நடக்கப்போவதை போன்று பேசிக் கொண்டிருப்பார்கள். தற்போதும் காங்கிரஸ் தங்களுடன் வந்துவிடும் என்பதை போன்று ஆதவ் அர்ஜுனா பேசுகிறார். தவெக உடன் காங்கிரஸ் வராது என்று ராகுல் காந்தி, செல்வப்பெருந்தகை திரும்ப திரும்ப சொல்லிவிட்டனர். காங்கிரஸ் உடன் கூட்டணி உறுதியாக இருக்கிறது என்று திமுக தலைமை சொல்லிவிட்டது. ஆனால் கொஞ்சமும் வெட்கம் இன்றி சொல்கிறார்கள். 25 இடங்களை கொடுத்து காங்கிரசை அவமதிப்பு செய்துவிட்டார் என்று ஆதவ் வேதனைப்படுகிறார். அது திமுக கூட்டணியின் பிரச்சினை. எதற்காக நீங்கள் இவ்வளவு வேதனைப் படுகிறீர்கள்?

தன்னுடைய பேட்டியில் மீண்டும் ஜென்ஸி கிட்ஸ்களை தூண்டிவிடும் விதமாக தான் ஆதவ் அர்ஜுனா பேசினார். அவரிடம் அரசியலோ, சமூக நலத்திட்டங்களோ எதுவும் இல்லை.  அப்போது அவர்கள் பேசிய ஊழல் எதிர்ப்பு என்பது ஏமாற்று என்பது தற்போது தெரிகிறதா இளைஞர்களே. ஊழல் எதிர்ப்பு என்று சொல்லிவிட்டு, இன்றைக்கு அதிமுகவின் அனைத்து ஊழல்களையும் ஆதவ் நியாயப் படுத்துகிறார்.

தமிழ்நாட்டில் உள்ள வளங்களை பயன்படுத்தி, மாநிலத்தை முன்னேற்ற வேண்டும். டெல்லியிடம் கேட்கக்கூடாது என்று ஆதவ் அர்ஜுனா சொல்கிறார். நாம் டெல்லியை நோக்கி கல்வி நிதியோ, வரி விதிப்பு குறித்து கேள்வி கேட்கக்கூடாது என்று உருவாக்கப்பட்ட கட்சி தவெக. ஆதவ் அர்ஜுனா தன்னுடைய பேட்டியில் எங்காவது ஒடுக்கப்பட்டவர்கள் நலன். சிறுபான்மையினர் நலன், எஸ்.ஐ.ஆர் படிவம்
மூலம் நம்முடைய வாக்கு திருடப்படுகிறது என்கிற ஆதங்கம் அவரிடம் இல்லை. திமுகவை திட்ட வேண்டும். அதிமுக நல்ல கட்சி. ஜெயலலிதா ஊழல் அற்றவர். ஆனால் இரண்டு திராவிட கட்சிகளும் ஊழல் கட்சிகள் நாங்கள் ஊழல் அற்றவர்கள் என்று சொல்லித்தான் அரசியலுக்கு வந்தனர்.

தற்போது அதிமுக நல்ல கட்சி என்கிறார். அதிமுக ஏற்கனவே இருக்கும்போது,  நீங்கள் எதற்காக வந்தீர்கள்? உங்களுக்கு அதிமுகவை போன்று வர வேண்டும் என்பதுதான் நோக்கம் என்றால், நீங்கள் அந்த கட்சியிலேயே சேர்ந்து விடலாமே. எதற்காக தனியாக ஒரு கட்சி? ஆதவ் அர்ஜுனாவின் ஒரே நோக்கம் திமுகவை எதிர்ப்பது. தனிப்பட்ட முறையில் ஸ்டாலினையும், உதயநிதியை பழிவாங்குவது தவிர்த்து, கொள்கை ரீதியாக இவர்களுக்கு எந்த முரண்பாடும் கிடையாது.

திமுகவில் இருந்து 2 அமைச்சர்கள் பேசுவதாக வதந்தி பரப்புகிறார்கள். பிடிஆர் அதிருப்தியில் இருக்கிறார் என்று சொல்கிறார்கள். அவர் போன்ற ஒரு அறிவுஜீவி விஜய் கட்சிக்கு செல்வரா? நீதிக்கட்சி பாரம்பரியத்தில் வந்த பிடிஆர், சங்கிகளால் உருவாக்கப்பட்ட தவெகவுக்கு எப்படி செல்வார்? அவர்களால் எந்த 2 அமைச்சர்கள் பேசுகிறார்கள் என்று சொல்ல முடியுமா? திமுக ஊழல் செய்வதாக செல்கிற விஜய், அந்த கட்சியில் இருந்து வருகிறவர்களை ஏற்றுக்கொண்டால் நீங்கள் எப்படி மாற்று அரசியல் சக்தியாக இருப்பீர்கள்? திரைக்கவர்ச்சியை பயன்படுத்தி டெல்லி இங்கே ஒரு கட்சியை உருவாக்குகிறது.

ஆதவ் அர்ஜுனா வெளிப்படையாக அம்பலப் படுகிறார். திமுக மீதான வன்மத்தை காண்பிக்கிறாரே தவிர, பாஜகவை எதிர்த்து பேச மறுக்கிறார். தவெகவில் உள்ள இளைஞர்கள் இது யாருக்கான கட்சி என்று புரிந்துகொள்ள வேண்டும். பாஜகவுக்கு தமிழ்நாட்டில் நேரடியாக மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். எனவே ஆந்திராவில் பவன் கல்யாணை உருவாக்கியது போல, விஜயை வைத்து அரசியல் அற்ற ஒரு கூட்டத்தை உருவாக்கி எப்படியாவது வந்துவிடலாம் என்று பார்க்கிறார்கள், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ