Homeசெய்திகள்சினிமாமீண்டும் மீண்டும் தள்ளிப்போகும் 'அரசன்' பட ஷூட்டிங்.... அதிருப்தியில் ரசிகர்கள்!

மீண்டும் மீண்டும் தள்ளிப்போகும் ‘அரசன்’ பட ஷூட்டிங்…. அதிருப்தியில் ரசிகர்கள்!

-

- Advertisement -

அரசன் பட ஷூட்டிங் மீண்டும் மீண்டும் தள்ளிப்போவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.மீண்டும் மீண்டும் தள்ளிப்போகும் 'அரசன்' பட ஷூட்டிங்.... அதிருப்தியில் ரசிகர்கள்!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ள திரைப்படம் தான் ‘அரசன்’. இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதேசமயம் இந்த படமானது ‘வடசென்னை’ படத்தின் யுனிவர்ஸாக உருவாகிறது என்றும் இரண்டு பாகங்களாக இது உருவாக இருக்கிறது என்றும் தகவல் வெளியாகி வருகின்றன. நடிகர் சிம்பு இந்த படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்க உள்ளார். அடுத்தது இந்த படத்தில் நெல்சன், ஆண்ட்ரியா ஆகியோர் நடிக்க இருப்பதாக சொல்லப்பட்டது. இது தவிர விஜய் சேதுபதி இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் மீண்டும் தள்ளிப்போகும் 'அரசன்' பட ஷூட்டிங்.... அதிருப்தியில் ரசிகர்கள்!இவ்வாறு இந்த படம் தொடர்பான பல அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. இருப்பினும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து தள்ளிப்போய்க் கொண்டே இருக்கிறது. ஏனென்றால் ஆரம்பத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த நவம்பர் 24ஆம் தேதி தொடங்கும் என வெற்றிமாறன் கூறியிருந்தார். அதன் பின்னர் சில தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த மாத இறுதியில் இந்த படம் தொடங்கும் என்று கூறப்பட்டது. மீண்டும் மீண்டும் தள்ளிப்போகும் 'அரசன்' பட ஷூட்டிங்.... அதிருப்தியில் ரசிகர்கள்!ஆனால் தற்போது கிடைத்த தகவலின் படி வருகின்ற டிசம்பர் 8ஆம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு பிள்ளையார்பட்டியில் தொடங்க இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தந்தாலும் படப்பிடிப்பு தொடர்ந்து தள்ளிப்போவது சற்று அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

MUST READ