Homeசெய்திகள்சினிமாதமிழ் திரையுலகில் மீண்டும் சோகம்: பிரபல குணச்சித்திர நடிகர் வி.சி.ஜெயமணி மாரடைப்பால் காலமானார்!

தமிழ் திரையுலகில் மீண்டும் சோகம்: பிரபல குணச்சித்திர நடிகர் வி.சி.ஜெயமணி மாரடைப்பால் காலமானார்!

-

- Advertisement -

‘திருமதி செல்வம்’, ‘சிறகடிக்க ஆசை’ தொடர்கள் மூலம் பிரபலமானவர்; திரையுலகினர் அஞ்சலி!தமிழ் திரையுலகில் மீண்டும் சோகம்: பிரபல குணச்சித்திர நடிகர் வி.சி.ஜெயமணி மாரடைப்பால் காலமானார்!

தமிழ் திரைப்பட மற்றும் சின்னத்திரையின் பிரபல குணச்சித்திர நடிகரான வி.சி.ஜெயமணி (76) மாரடைப்பு காரணமாக சென்னையில் காலமானார். அவரது இந்தத் திடீர் மறைவு தமிழ் திரையுலகினரிடையேயும், சின்னத்திரை ரசிகர்களிடையேயும் பெரும் அதிர்ச்சியையும் ஆழந்த சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

we-r-hiring

நாடக மேடை முதல் வெள்ளித்திரை வரை அசாத்திய பயணம்
சிறுவயது முதலே நடிப்பின் மீது கொண்ட தீவிர ஆர்வத்தின் காரணமாக நாடகங்களில் நடிக்கத் தொடங்கிய வி.சி.ஜெயமணி, பின்னர் சினிமா மற்றும் சின்னத்திரையில் தனது எதார்த்தமான நடிப்பால் தனித்துவமான இடத்தைப் பிடித்தார்.  சன் தொலைக்காட்சியில் மாபெரும் வெற்றி பெற்ற ‘திருமதி செல்வம்’ தொடரில் நாயகனின் தந்தையான ‘பூங்காவனம்’ கதாபாத்திரத்தில் நடித்து தமிழக மக்களின் இல்லங்கள் தோறும் நீங்காத இடம் பிடித்தார்.

புகழ்பெற்ற ‘மெட்டி ஒலி’, ‘கல்யாண பரிசு’ மற்றும் விஜய் தொலைக்காட்சியின் ‘சிறகடிக்க ஆசை’ தொடரில் ‘மலேசியா மாமா’ வேடத்திலும் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். 40 சீரியல்கள் இயக்குநர் & 250 படங்கள்: சீரியல்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல், சுமார் 40-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சித் தொடர்களை இயக்கியும் சாதனை படைத்துள்ளார். மேலும், முஸ்தபா, லக்கி மேன், சிங்கம் உள்ளிட்ட 250-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார். இவர் தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் டப்பிங் யூனியனில் தீவிர உறுப்பினராகச் செயல்பட்டு வந்தார்.

திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி
சென்னை வடபழனியில் உள்ள அவரது இல்லத்தில் மாரடைப்பு காரணமாகக் காலமான நடிகர் வி.சி.ஜெயமணியின் உடலுக்குத் திரையுலகப் பிரபலங்கள், சின்னத்திரை கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும், சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். எதார்த்தமான நடிப்பால் பல தசாப்தங்களாக மக்களை மகிழ்வித்த மூத்த கலைஞனின் மறைவு தமிழ் சின்னத்திரை உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.

யோகி பாபுவின் 300-வது படம்: டி. இமான் இசையில் வெளியான ‘பொறு மனமே பொறு’ பாடல்!

MUST READ