spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா”நல்ல நண்பரை இழந்துவிட்டோம்” – ரஜினி உருக்கம்

”நல்ல நண்பரை இழந்துவிட்டோம்” – ரஜினி உருக்கம்

-

- Advertisement -

நல்ல நண்பரை இழந்துவிட்டதாக மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் மறைவு குறித்து ரஜினிகாந்த் உருக்கம் தெரிவித்துள்ளாா்.”நல்ல நண்பரை இழந்துவிட்டோம்” – ரஜினி உருக்கம்பிரபல மலையாள இயக்குநர், கதாசிரியர் மற்றும் நடிகருமான ஸ்ரீனிவாசன்  உடல்நலக்குறைவு காரணமாக எர்ணாகுளத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தாா். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவருக்கு வயது 69.

தமிழில் லேசா லேசா, புள்ளக்குட்டிக்காரன் உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார். லேசா லேசா படத்தில் இவரின் காமெடி காட்சிகளை யாராலும் மறக்க முடியாது. இயல்பான நடிப்பு மற்றும் முகபாவனைகள் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர். ஒரு தேசிய விருது, இரண்டு ஃபிலிம்பேர் விருதுகள் மற்றும் 6 முறை கேரள அரசு விருதுகளை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் மறைவிற்கு பல்வேறு அரசியல் தலைவா்களும், திரைப்பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துள்ளாா்.

we-r-hiring

இந்நிலையில்,  திரைப்படக் கல்லூரியில் தன்னுடன் படித்தவர் ஸ்ரீனிவாசன் என்பதை நினைவுகூர்ந்து ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்தார். ஸ்ரீனிவாசன் மிகச்சிறந்த நடிகர் என்றும் அவா் நல்ல மனிதர் என்றும் நடிகர் ரஜினிகாந்த் புகழாரம் தெரிவித்துள்ளாா்.

“பொருநை ஆற்றங்கரை நாகரிகம்” துவக்க விழா ஏற்பாடுகள் தீவிரம்…அமைச்சர்கள் நேரில் ஆய்வு…

MUST READ