பிரபல நடிகரும் அரசியல்வாதியுமான விஜயகாந்த் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இவருடைய மறைவு தமிழ் ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. இன்று வரையிலும் மீள முடியாத துயரத்தில் இருந்து வருகின்றனர் தமிழ் மக்கள். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக நடிகர் விஜயகாந்த், விஜயின் கோட் படத்தில் ஏ ஐ தொழில் நுட்பத்தின் மூலம் உயிர் பெற இருக்கிறார் என்று தகவல் வெளியானது. இதனை பிரேமலதா விஜயகாந்த் பேட்டி ஒன்றில் உறுதி செய்திருந்தார். இந்த தகவல் ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியது. தற்போது மற்றொரு புதிய படத்தில் நடிகர் விஜயகாந்த், ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் திரையில் தோன்ற இருக்கிறார் என்று புதிய அப்டேட் கிடைத்துள்ளது. அதாவது விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன், படை தலைவன் எனும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ராகவா லாரன்ஸ் கேமியோ ரோலில் நடித்துள்ளார்.
அதேசமயம் நடிகர் விஜயகாந்தும் ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் திரையில் தோன்றவுள்ளார். இந்த தகவல் அறிந்த ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் இருந்து வருகின்றனர். மேலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் இது அதிகப்படுத்தி இருக்கிறது. ஆகவே நடிகர் விஜயகாந்தை திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
- Advertisement -