Homeசெய்திகள்சினிமாமலையாளத்தில் அடுத்த ஹிட் ரெடி... குருவாயூர் அம்பலநடையில் முன்னோட்டம் வெளியீடு...

மலையாளத்தில் அடுத்த ஹிட் ரெடி… குருவாயூர் அம்பலநடையில் முன்னோட்டம் வெளியீடு…

-

மலையாளத்தில் காமெடி கலாட்டாவாக உருவாகி இருக்கும் குருவாயூர் அம்பலநடையில் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி உள்ளது.

மலையாளம் மட்டுமன்றி தமிழிலும் பிருத்விராஜ் பல படங்களில் நடித்திருக்கிறார். முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் அவர் அண்மைக் காலமாக வில்லன் வேடத்திலும் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு பிரபாஸ் நடிப்பில் வெளியான சலார் படத்தில் நடிகர் பிருத்விராஜ் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவரது வில்லன் நடிப்பிற்கு வரவேற்பும் கிடைத்தது. இதற்காக மலையாளத்தில் அவர் ஹீரோவாக வாங்கக்கூடிய தொகையை விட மிகப்பெரிய தொகை சலார் படத்தில் அவருக்கு சம்பளமாக கொடுக்கப்பட்டிருக்கிறது.

தற்போது மலையாளத்தில் உருவாகி வரும் குருவாயூர் அம்பலநடையில் என்ற சின்ன பட்ஜெட் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் பிருத்விராஜ் நடித்திருக்கிறார். விபின் தாஸ் இயக்கம் இந்த படத்தில் பசில் ஜோசப், யோகி பாபு நிகிலா விமல், அனஸ்வரா ராஜன், ரேகா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். E4 என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு நீரஜ் ரெவி ஒளிப்பதிவு செய்துள்ளார். அங்கித் மேனன் இசை அமைத்துள்ளார்.

இத்திரைப்படத்தின் முதல் தோற்றம் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைப்படம் வரும் 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைதளங்களில் வரவேற்பை பெற்று வருகிறது. துபாயில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது, டிரைலர் வெளியிடப்பட்டது.

MUST READ