Homeசெய்திகள்சினிமாவிஜய் சேதுபதி - மணிகண்டன் கூட்டணியில் வெப் தொடர்... கைவிடப்படுவதாக தகவல்...

விஜய் சேதுபதி – மணிகண்டன் கூட்டணியில் வெப் தொடர்… கைவிடப்படுவதாக தகவல்…

-

தமிழ் சினிமாவில் மக்கள் செல்வனாக கொண்டாடப்படுபவர் விஜய் சேதுபதி. ஹீரோ, வில்லன் என அனைத்து கதாபாத்திரங்களிலும் விஜய் சேதுபதி தன் நடிப்பு திறமையால் ரசிகர்களை கவர்வார். தற்போது விஜய் சேதுபதி 51-வது படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் கதைக்களம் மலேசியா என்பதால், அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் தொடங்கியது. மொத்த படப்பிடிப்பும் மலேசியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.

அவர் அடுத்தடுத்து பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். ஆண்டவன் கட்டளை, கடைசி விவசாயி ஆகிய படங்கை இயக்கியவர் மணிகண்டன். இவர் இயக்கும் புதிய இணைய தொடரில் விஜய் சேதுபதிவிஜய் சேதுபதி நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மம்முட்டி ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் திடீரென இந்த கதை இணையத்தொடராக படமாக்கப்படும் என அறிவிப்பு வெளியானது. இதனால் அதிருப்தி அடைந்த மம்முட்டி படத்தில் இருந்து வௌியேறினார்
இந்நிலையில், இந்த தொடரின் பட்ஜெட் குறிப்பிட்டதை விட அதிகமானதால், தற்போது ஹாட்ஸ்டார் இந்த வெப் தொடரை கைவிடுவதாக அறிவித்துள்ளது. இந்த தொடரை ஏற்கனவே, ஹாட்ஸ்டார் நிறுவனம் தயாரிப்பதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

MUST READ