Homeசெய்திகள்சினிமாவிரைவில் தொடங்கப்படும் '7ஜி ரெயின்போ காலனி 2' படப்பிடிப்பு!

விரைவில் தொடங்கப்படும் ‘7ஜி ரெயின்போ காலனி 2’ படப்பிடிப்பு!

-

செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் செவன் ஜி ரெயின்போ காலனி. இந்த படத்தில் ரவி கிருஷ்ணா மற்றும் சோனியா அகர்வால் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். காதல் கதை களத்தில் உருவான படம் 90ஸ் ஹிட்ஸ் களின் பேவரைட் படங்களில் ஒன்றாகும்.

தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு செல்வராகவன் 7ஜி ரெயின்போ காலனி இரண்டாம் பாகத்தை உருவாக்க உள்ளார். இது குறித்த தகவல்கள் சமீபத்தில் வெளியாகி இருந்தது. அதன்படி இந்த படத்தில் ரவி கிருஷ்ணா கதாநாயகனாக நடிக்க உள்ளார். கதாநாயகியாக மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் நடிக்க இருக்கிறார். யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் WhatsApp செயலியில் பெற

மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு வருகின்ற செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் தொடங்க வாய்ப்பு இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகை அனஸ்வரா ராஜன் திரிஷாவுடன் இணைந்து ராங்கி திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ