Homeசெய்திகள்சினிமாபிரபல காமெடி நடிகர் வீட்டில் குவா.. குவா.. சத்தம்.... ரசிகர்கள் வாழ்த்து!

பிரபல காமெடி நடிகர் வீட்டில் குவா.. குவா.. சத்தம்…. ரசிகர்கள் வாழ்த்து!

-

- Advertisement -

பிரபல காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லிக்கு குழந்தை பிறந்துள்ளது.பிரபல காமெடி நடிகர் வீட்டில் குவா.. குவா.. சத்தம்.... ரசிகர்கள் வாழ்த்து!

நடிகர் ரெடின் கிங்ஸ்லி நெல்சன் இயக்கத்தில் வெளியான கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களின் மூலம் நகைச்சுவை நடிகராக தனக்கென தனி ஒரு அடையாளத்தை உருவாக்கி, ஏராளமான ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்து இழுத்தார். அந்த வகையில் இவர் வித்தியாசமான உடல் மொழியில் ரசிகர்களை சிரிக்க வைப்பார். இவர் தற்போது தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.பிரபல காமெடி நடிகர் வீட்டில் குவா.. குவா.. சத்தம்.... ரசிகர்கள் வாழ்த்து! அந்த வகையில் அஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் இவர் நடித்திருப்பதாக சொல்லப்படுகிறது. இது தவிர இன்னும் சில படங்களிலும் கமிட் ஆகியுள்ளார் ரெடின் கிங்ஸ்லி. இதற்கிடையில் இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீரியல் நடிகை சங்கீதாவை காதலித்து திருமணம் செய்தார். அதன் பிறகு நடிகை சங்கீதா கர்ப்பமாக இருப்பதை அறிவித்தார் ரெடின் கிங்ஸ்லி. அந்த வகையில் சமீபத்தில் தனது மனைவி சங்கீதாவின் வளைகாப்பையும் நடத்தினார். பிரபல காமெடி நடிகர் வீட்டில் குவா.. குவா.. சத்தம்.... ரசிகர்கள் வாழ்த்து!இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோவும் இணையத்தில் வைரலாகி வந்த நிலையில் தற்போது ரெடின் கிங்ஸ்லி – சங்கீதா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதனை ரெடின் கிங்ஸ்லி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தன்னுடைய குழந்தையை கையில் ஏந்தியபடி இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த தகவல் அறிந்த ரசிகர்கள் ரெடின் கிங்ஸ்லி, சங்கீதாவிற்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

MUST READ