Homeசெய்திகள்சினிமாஇத எதிர்பார்க்கலயே.... 'சூர்யா 46' படத்தில் இணையும் பிரபல தெலுங்கு ஹீரோ!

இத எதிர்பார்க்கலயே…. ‘சூர்யா 46’ படத்தில் இணையும் பிரபல தெலுங்கு ஹீரோ!

-

- Advertisement -

சூர்யா 46 படத்தில் பிரபல தெலுங்கு ஹீரோ நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இத எதிர்பார்க்கலயே.... 'சூர்யா 46' படத்தில் இணையும் பிரபல தெலுங்கு ஹீரோ!

சூர்யா நடிப்பில் சமீபத்தில் ரெட்ரோ திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அதே சமயம் சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் தனது 45வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் எனும் திரைப்படத்திலும் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார் சூர்யா. இது தவிர இவர் சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் புதிய படம் ஒன்றில் நடிக்கப் போவதாகவும், அந்த படத்தை வெங்கி அட்லுரி இயக்கப் போவதாகவும் சமீப காலமாக பல தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. அதாவது சூர்யாவின் 46வது படமாக உருவாகும் இந்த படத்திற்கு தற்காலிகமாக சூர்யா 46 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத எதிர்பார்க்கலயே.... 'சூர்யா 46' படத்தில் இணையும் பிரபல தெலுங்கு ஹீரோ!இதற்கிடையில் இந்த படத்தில் நடிகை மமிதா பைஜு கதாநாயகியாக நடிக்க உள்ளார் எனவும் சொல்லப்படுகிறது. அதேசமயம் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தேவரகொண்டாவும் சூர்யா 46 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தந்ததோடு மட்டுமல்லாமல் படத்தின் மீதான ஆர்வத்தையும் தூண்டி உள்ளது.

MUST READ