Homeசெய்திகள்சினிமாநடிகை காஜல் அகர்வாலிடம் தவறாக நடக்க முயன்ற ரசிகர்... பொங்கி எழுந்த நடிகை...

நடிகை காஜல் அகர்வாலிடம் தவறாக நடக்க முயன்ற ரசிகர்… பொங்கி எழுந்த நடிகை…

-

- Advertisement -
தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான காஜல் அகர்வால் சமீப காலமாக கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்பாக காஜல் அகர்வால் நடிப்பில் ‘கோஸ்டி’ எனும் திரைப்படம் வெளியானது. ஜெய், மொட்ட ராஜேந்திரன், யோகி பாபு, ஜெகன், உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான காமெடி திரைப்படமான இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

அதன் பின் தற்போது கமல்ஹாசன் நடிப்பில் சங்கர் இயக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் காஜல் அகர்வால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து இவர் தற்போது தெலுங்கு மொழியில் தனது 60வது படத்தில் நடிக்கிறார். இப்படத்தை சசி கிரண் டிக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் அகில் தேகலா என்பவர் இயக்குகிறார். ஸ்ரீ சரண் பகாலா இதற்கு இசையமைக்கிறார். மேலும் இப்படத்தில் காஜல் அகர்வால் ஒரு மிடுக்கான போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

இந்நிலையில், காஜல் அகர்வால் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது, அவருடன் செல்பி எடுக்க ஏராளமான ரசிகர்கள் முண்டியடித்துச் சென்றனர். அப்போது ஒரு ரசிகர், காஜல் அகர்வாலிடம் செல்பி எடுத்தபோது தவறாக நடக்க முயற்சித்திருக்கிறார். இதனால் காஜல் அதிர்ச்சி அடைந்ததைக் கண்டு அவரது பாதுகாவலர்கள் அந்த ரசிகரை தள்ளிவிட்டனர். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

MUST READ