Homeசெய்திகள்சினிமாஅந்த படத்தில் நான் நடிக்கவே இல்லை.... நடிகர் மாதவன் வெளியிட்ட பதிவு!

அந்த படத்தில் நான் நடிக்கவே இல்லை…. நடிகர் மாதவன் வெளியிட்ட பதிவு!

-

- Advertisement -

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் மாதவன். தமிழில் இவர் அலைபாயுதே, மின்னலே என பல படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்திருக்கிறார். அந்த படத்தில் நான் நடிக்கவே இல்லை.... நடிகர் மாதவன் வெளியிட்ட பதிவு!மேலும் இவர் பாலிவுட்டிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் கடைசியாக இவர் சைத்தான் என்ற திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார். அடுத்தது டெஸ்ட், அதிர்ஷ்டசாலி போன்ற பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இந்நிலையில் தான் நடிகர் மாதவன், ராகவா லாரன்ஸ் நடிக்கும் பென்ஸ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது. இந்த பென்ஸ் படத்தினை லோகேஷ் கனகராஜ் தயாரிக்க பாக்யராஜ் கண்ணன் இயக்க இருக்கிறார். இந்த படம் தொடர்பான அறிவிப்பு ஏற்கனவே வெளியாகி இந்த படம் லோகேஷ் கனகராஜின் எல்சியு வில் இணைய இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதேசமயம் மாதவன் இந்த படத்தில் நடிக்க உள்ள தகவலும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தின.

இது குறித்து நடிகர் மாதவன் தனது சமூக வலைதள பக்கத்தில், “நான் இந்த செய்தியை கேள்விப்பட்டேன். எல்சியு – வில் இணைய நான் விரும்புகிறேன். ஆனால் இந்த செய்தி எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இந்த செய்தியை பற்றி எனக்கு எந்த யூகமும் இல்லை. யாரும் என்னை அணுகவில்லை” என்று ராகவா லாரன்ஸின் பென்ஸ் படத்தை குறிப்பிட்டு பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். இதன் மூலம் நடிகர் மாதவன் பென்ஸ் படத்தில் நடிக்கவில்லை என்பது உறுதியாகி உள்ளது.

MUST READ