நடிகர் சூரி தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த வகையில் வெற்றிமாறன் இயக்கத்தில் இவர் நடித்திருந்த விடுதலை திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்து அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெற்று தந்துள்ளது.
அதன்படி விடுதலை இரண்டாம் பாகத்தில் நடித்துவரும் சூரி அதே சமயத்தில் கருடன் என்ற திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் சூரியுடன் இணைந்து சசிகுமார், உன்னி முகுந்தன், சமுத்திரக்கனி, ரேவதி ஷர்மா, ஷிவதா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை எதிர்நீச்சல், காக்கிச்சட்டை உள்ளிட்ட படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார். அர்த்துர் ஏ வில்சன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய யுவன் சங்கர் ராஜா இதற்கு இசையமைத்துள்ளார். மேலும் வெற்றிமாறன் கதையில் உருவாகியுள்ள லார்க் ஸ்டுடியோஸ் , கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்த நிலையில் படத்தின் கிளிம்ப்ஸ் மற்றும் அதைத் தொடர்ந்து முதல் பாடலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
அதைத் தொடர்ந்து படக் குழுவினர் கருடன் திரைப்படத்தை மார்ச் 29ஆம் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில் 40 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகி இருக்கும் இந்த படத்தின் ஓடிடி உரிமை இன்னும் விற்கப்படாத காரணத்தால் இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போவதாக புதிய தகவல் கிடைத்துள்ளது. எனவே படத்தில் புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- Advertisement -
