Homeசெய்திகள்சினிமாமாமன்னன் படத்தில் டப்பிங் பணியில் நடிகர் வடிவேலு

மாமன்னன் படத்தில் டப்பிங் பணியில் நடிகர் வடிவேலு

-

- Advertisement -

‘மாமன்னன்’ திரைப்படத்தின் டப்பிங் பணிகளை நடிகர் வடிவேலு தொடங்கினார்.

we-r-hiring

நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘மாமன்னன்’. இதில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் பகத் பாசில், நடிகர் வடிவேலு நடிக்கின்றனர். இதற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

அனைத்து கட்ட படப்பிடிப்பும் நிறைவடைந்து (Post Production) படத்திற்கான இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு அப்பாவாக நடித்துள்ள நடிகர் வடிவேலு தற்போது படத்திற்கான குரல் பதிவில் ஈடுபட்டுள்ளார். மாரி செல்வராஜுடன் குரல் பதிவு நேரங்களில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பட குழு வெளியிட்டுள்ளது.

MUST READ