spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'புஷ்பா 2 - தி ரூல்' படத்தின் டப்பிங் பணியில் நடிகை ராஷ்மிகா!

‘புஷ்பா 2 – தி ரூல்’ படத்தின் டப்பிங் பணியில் நடிகை ராஷ்மிகா!

-

- Advertisement -
kadalkanni

நடிகை ராஷ்மிகா மந்தனா, புஷ்பா 2 படத்தின் டப்பிங் பணிகளை செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.

ராஷ்மிகா மந்தனா தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களிலும் பணியாற்றி வருகிறார். 'புஷ்பா 2 - தி ரூல்' படத்தின் டப்பிங் பணியில் நடிகை ராஷ்மிகா!அந்த வகையில் ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்துள்ள இவர் தமிழில், சுல்தான், வாரிசு போன்ற படங்களில் நடித்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் அனிமல் படத்தில் இவரது நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. அடுத்தது இவர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் குபேரா போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையில் இவர், அல்லு அர்ஜுன் மற்றும் சுகுமார் கூட்டணியில் உருவாகும் புஷ்பா 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைக்கிறார். 'புஷ்பா 2 - தி ரூல்' படத்தின் டப்பிங் பணியில் நடிகை ராஷ்மிகா!மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வரும் இந்த படம் வருகின்ற டிசம்பர் மாதம் 5ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர இருக்கிறது. அதற்கான முழு ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா, புஷ்பா 2 படத்தில் டப்பிங் பணிகளை தொடங்கி இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டு அறிவித்துள்ளார்.'புஷ்பா 2 - தி ரூல்' படத்தின் டப்பிங் பணியில் நடிகை ராஷ்மிகா! மேலும், “புஷ்பா 2 படப்பிடிப்பு ஏறத்தாழ நிறைவடைந்துவிட்டது. முதல் பாதிக்கான டப்பிங் பணிகளும் நிறைவடைந்துள்ளது. இரண்டாம் பாதிக்கான டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன” என்று குறிப்பிட்டு பதிவு ஒன்றிணையும் வெளியிட்டுள்ளார்.

MUST READ