spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'புஷ்பா 2' படத்தில் நடிகை சமந்தா..... எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

‘புஷ்பா 2’ படத்தில் நடிகை சமந்தா….. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

-

- Advertisement -

புஷ்பா 2 படத்தில் நடிகை சமந்தா இணைவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு புஷ்பா தி ரைஸ் எனும் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்காக அல்லு அர்ஜுன் தேசிய விருதினையும் வென்றுள்ளார். 'புஷ்பா 2' படத்தில் நடிகை சமந்தா..... எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!அடுத்தது இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வரும் நிலையில் ஆரம்பத்தில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அதன்படி புஷ்பா தி ரூல் என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படமானது வருகின்ற டிசம்பர் 5ஆம் தேதி திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தின் டீசரும் அடுத்தடுத்த பாடல்களும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளன.

we-r-hiring

அடுத்தது புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் நடிகை சமந்தா, ஊ சொல்றியா எனும் பாடலுக்கு நடனமாடியிருப்பார். இந்த பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது. இருப்பினும் புஷ்பா 2 திரைப்படத்தில் இது போன்ற பாடல் இருக்குமா? என்ற ஆவல் ரசிகர்களுக்கு இருக்கிறது. அதேபோல் புஷ்பா 2 படத்தில் ஸ்பெஷல் பாடல் ஒன்று இருப்பதாகவும் அதற்கு பாலிவுட் நடிகை ஒருவர் நடனமாட இருப்பதாகவும் தகவல் வெளியானது. அதைத் தொடர்ந்து நடிகை ஸ்ரீ லீலா, அல்லு அர்ஜுனுடன் இணைந்து ஆட்டம் போட போகிறார் என்று தகவல்கள் கசிந்தது. 'புஷ்பா 2' படத்தில் நடிகை சமந்தா..... எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!இந்நிலையில் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால், புஷ்பா 2 படத்தில் நடிகை சமந்தாவும் இணையப் போகிறாராம். அதாவது ஸ்ரீ லீலா, சமந்தா ஆகிய இருவரும் இணைந்து ஸ்பெஷல் பாடல் ஒன்றுக்கு குத்தாட்டம் போட இருப்பதாகவும் இந்த பாடல் தொடர்பான படப்பிடிப்பு வருகின்ற நவம்பர் 6ம் தேதி நடைபெற இருப்பதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தந்ததோடு எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தி உள்ளது.

MUST READ