நடிகை மாளவிகா மோகனன் ஆரம்பத்தில் மலையாள சினிமாவில் பணியாற்றி வந்ததன் மூலம் ரசிகர்களால் அறியப்பட்டவர். அதன் பின்னர் இவர் தமிழ் சினிமாவில் பேட்ட, மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். அடுத்தது இவர் தனுஷின் நடிப்பில் வெளியான மாறன் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கடைசியாக இவர் விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் திரைப்படத்தில் ஆக்ஷன் காட்சிகளிலும் கெத்து காட்டி பெயர் பெற்றுள்ளார். மேலும் இவர் தி ராஜா சாப் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையில் கார்த்தி நடிப்பில் உருவாகும் சர்தார் 2 திரைப்படத்தில் மாளவிகா மோகனன் இணைந்துள்ளதாக படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது.
இந்நிலையில் இந்த படத்திலும் மாளவிகா மோகனன் ஆக்ஷன் காட்சியில் நடிக்க போவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இது தொடர்பான புகைப்படங்களை மாளவிகா மோகன் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
சர்தார் 2 திரைப்படத்தை பிஎஸ் மித்ரன் இயக்க பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இதற்கு இசை அமைக்கிறார். அடுத்தது இந்த படத்தில் கார்த்தி, மாளவிகா மோகனுடன் இணைந்து எஸ் ஜே சூர்யா, ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.