spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஅஜித் நடிப்பில் உருவாகும் காமெடி படம்?.... இது என்னடா புது ட்விஸ்டா இருக்கு!

அஜித் நடிப்பில் உருவாகும் காமெடி படம்?…. இது என்னடா புது ட்விஸ்டா இருக்கு!

-

- Advertisement -

அஜித் நடிப்பில் உருவாகும் காமெடி படம்?.... இது என்னடா புது ட்விஸ்டா இருக்கு!எச். வினோத் இயக்கத்தில் வெளியான துணிவு படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு அஜித் தனது 62 வது படத்தில் நடித்து வருகிறார். மகிழ் திருமேனி இயக்கி வரும் இந்த படத்திற்கு விடா முயற்சி என்று தலைப்பிடப்பட்டுள்ளது. லைக்கா ப்ரோடுக்ஷன் நிறுவனம் இதனை தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைக்கிறார். அஜித்துடன் இணைந்து ஆரவ், சஞ்சய்தத், திரிஷா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் அஜர்பைஜானில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து அஜித் தனது அடுத்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். ஆதிக் ரவிச்சந்திரன் திரிஷா இல்லனா நயன்தாரா, பஹீரா போன்ற படங்களை இயக்கியவர். சமீபத்தில் விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா கூட்டணியில் மார்க் ஆண்டனி திரைப்படத்தை இயக்கியிருந்தார். இப்படம் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இந்நிலையில் அஜித்தும், ஆதிக் ரவிச்சந்திரனும் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.அஜித் நடிப்பில் உருவாகும் காமெடி படம்?.... இது என்னடா புது ட்விஸ்டா இருக்கு!

எனவே அஜித்தின் அடுத்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளி வந்ததன்படி இவர்களின் கூட்டணியில் உருவாக இருக்கும் இந்த புதிய படம் காமெடி கதை களத்தில் உருவாக இருப்பதாக தற்போது புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அஜித்தின் வீரம் படத்தைப் போல ஆக்சன், செண்டிமெண்ட், காமெடி என ஒரு கமர்சியல் படமாக இருக்கப் போகிறதா அல்லது காமெடி மட்டுமே இருக்கப் போகிறதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆதிக் ரவிச்சந்திரன் மார்கண்டனி படத்தைப் போல தன்னுடைய ஸ்டைலில் இயக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. எனினும் இது சம்பந்தமான அடுத்தடுத்த அப்டேட்கள் வெளிவந்தால் தான் இதற்கான விடை கிடைக்கும்.

MUST READ