spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபொங்கலுக்கு வருவதை மீண்டும் உறுதி செய்த அஜித்தின் 'குட் பேட் அக்லி'!

பொங்கலுக்கு வருவதை மீண்டும் உறுதி செய்த அஜித்தின் ‘குட் பேட் அக்லி’!

-

- Advertisement -

அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் குட் பேட் அக்லி. இந்த படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பொங்கலுக்கு வருவதை மீண்டும் உறுதி செய்த அஜித்தின் 'குட் பேட் அக்லி'!ஆதிக் ரவிச்சந்திரன் படத்தினை இயக்கி வருகிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைக்கிறார். இது தொடர்பான அறிவிப்பு வெளியானதில் இருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வந்தது. அத்துடன் அறிவிப்பு போஸ்டரிலும் படமானது 2025 பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மே மாதம் ஐதராபாத்தில் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஸ்பெயின் நாட்டில் நடைபெற இருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றது. அதேசமயம் இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, சுனில், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலரும் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது.

இப்படி சூழல் இருக்க கடந்த சில தினங்களாகவே குட் பேட் அக்லி திரைப்படம் 2025 பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகாது எனவும் 2025 மே மாதத்தில்தான் வெளியாகும் எனவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியானது. ஆனால் படக்குழுவினர் இன்று (செப்டம்பர் 17) ஆதிக் ரவிச்சந்திரனின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக போஸ்டர் ஒன்றை வெளியிட்டு மீண்டும் 2025 பொங்கலுக்கு வருவதை உறுதி செய்துள்ளனர்.

MUST READ