Homeசெய்திகள்சினிமாஆகாஷ் முரளி நடிக்கும் 'நேசிப்பாயா'.....ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

ஆகாஷ் முரளி நடிக்கும் ‘நேசிப்பாயா’…..ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

-

- Advertisement -

ஆகாஷ் முரளி நடிக்கும் நேசிப்பாயா படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.

மறைந்த நடிகர் முரளியின் இளைய மகன் தான் ஆகாஷ் முரளி. இவர் தற்போது நேசிப்பாயா எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். ஆகாஷ் முரளி நடிக்கும் 'நேசிப்பாயா'.....ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படும் சங்கரின் இளைய மகள் அதிதி சங்கர் நடித்திருக்கிறார். இந்த படத்தை அறிந்தும் அறியாமலும், பட்டியல், பில்லா , ஆரம்பம் உள்ளிட்ட படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமான விஷ்ணுவரதன் இயக்கியிருக்கிறார். தெலுங்கு, இந்தி மொழி படங்களிலும் பணியாற்றி வந்த விஷ்ணுவரதன் தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழ் சினிமா பக்கம் திரும்பி உள்ளார். ஆகாஷ் முரளி நடிக்கும் 'நேசிப்பாயா'.....ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!அதன்படி இவர் இயக்கியுள்ள இந்த நேசிப்பாயா படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்து வருகிறது. காதல் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகியிருக்கும் இந்த படத்தினை எக்ஸ் பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்த நிலையில் தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர். ஆகாஷ் முரளி நடிக்கும் 'நேசிப்பாயா'.....ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது. விரைவில் இந்த படம் வெளியாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் அந்த போஸ்டரில் ஆகாஷ் முரளி, அதிதி சங்கர் ஆகியோருடன் இணைந்து சரத்குமார், பிரபு, ராஜா, குஷ்பூ ஆகியோரும் நடித்துள்ளார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ