Homeசெய்திகள்சினிமாசாலையோர தாபாவில் உணவருந்திய அல்லு அர்ஜூன்... புகைப்படம் வைரல்...

சாலையோர தாபாவில் உணவருந்திய அல்லு அர்ஜூன்… புகைப்படம் வைரல்…

-

சாலையோர தாபாவில் மனைவியுடன் உணவு சாப்பிட்ட நடிகர் அல்லு அர்ஜூனின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அல்லு அர்ஜூன், ஆரம்ப காலத்தில் கமர்ஷியல் மற்றும் காதல் திரைப்படங்களில் மட்டுமே நடித்து வந்தவர் நடிகர் அல்லு அர்ஜூன். இதையடுத்து, இறுதியாக அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் அவரை பான் இந்தியா நடிகராக முன்னிறுத்தியது. புஷ்பா படத்தின் வெற்றி அவரை தெலுங்கு திரையுலகம் தாண்டி இந்திய திரையுலகம் வரை கொண்டு சென்றது.

முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் அல்லு அர்ஜூன் தற்போது புஷ்பா இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். சுகுமார் இயக்கும் இத்திரைப்படத்தை மைத்ரி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும், ஃபகத் ஃபாசில், ஜகதீஸ் பிரதாப், சுனில் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

புஷ்பா இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சாலையோர தாபா ஒன்றில் நடிகர் அல்லு அர்ஜூனும், அவரது மனைவி சினேகாவும் ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிடும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது

MUST READ