Homeசெய்திகள்சினிமாஅர்ஜுன் தாஸின் 'அநீதி' பட ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அர்ஜுன் தாஸின் ‘அநீதி’ பட ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

-

- Advertisement -

அநீதி படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அர்ஜுன் தாஸ் நடிப்பிலும் வசந்தபாலன் இயக்கத்திலும் உருவான திரைப்படம் அநீதி. இதில் அர்ஜுன் தாஸுடன் இணைந்து துஷாரா விஜயன், வனிதா விஜயகுமார், காளி வெங்கட், அறந்தாங்கி நிஷா, சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். திரில்லர் கதை களத்தில் உருவான இந்த படம் கடந்த ஜூலை 21ஆம் தேதி வெளியானது. இதனை வசந்த பாலனின் அர்பன் பாய்ஸ் நிறுவனமும் இயக்குனர் சங்கரின் எஸ் பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. ஜிவி பிரகாஷ் இதற்கு இசையமைத்துள்ளார்.

we-r-hiring

தற்போது இந்த படம் 2 மாதங்கள் கழித்து 2 ஓடிடி தளங்களில் வெளியாக இருக்கிறது. அதன்படி வருகின்ற செப்டம்பர் 15 ஆம் தேதி (நாளை) ஆஹா தமிழ் மற்றும் அமேசான் பிரைம் தளங்களில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ