spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஅர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் 'தீயவர் குலை நடுங்க' படத்தின் புதிய அப்டேட்!

அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘தீயவர் குலை நடுங்க’ படத்தின் புதிய அப்டேட்!

-

- Advertisement -

அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் தீயவர் குலை நடுங்க படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் 'தீயவர் குலை நடுங்க' படத்தின் புதிய அப்டேட்!

பிரபல நடிகர் அர்ஜுன் தென்னிந்திய திரை உலகில் நடிகராகவும், இயக்குனராகவும் வலம் வருகிறார். அந்த வகையில் இவர் கடைசியாக ஜீவாவின் அகத்தியா திரைப்படத்தில் நடித்திருந்தார். அதே சமயம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் காக்கா முட்டை, தர்மதுரை, கனா ஆகிய படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். அதே சமயம் இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். மேலும் இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாள உள்ளிட்ட மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

we-r-hiring

இந்நிலையில் ஆக்சன் கிங் அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகிய இருவரும் இணைந்து தீயவர் குலை நடுங்க எனும் திரைப்படத்தில் நடித்திருக்கின்றனர். இப்படத்தில் ஜிகே ரெட்டி, லோகு, பிக் பாஸ் அபிராமி, ராம்குமார், தங்கதுரை மற்றும் பலர் நடித்துள்ளனர். தினேஷ் லக்ஷ்மணன் இந்த படத்தை எழுதி, இயக்கியுள்ளார். ஜி.ஆர். ஆர்ட்ஸ் நிறுவனமும் சன் மூன் யுனிவர்சல் பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது. பரத் ஆசிவகன் இந்த படத்திற்கு இசையமைக்க சரவணன் அபிமன்யு இதன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் 'தீயவர் குலை நடுங்க' படத்தின் புதிய அப்டேட்!ஆரம்பத்தில் இந்த படத்திற்கு தீயவர் குலைகள் நடுங்க என்று பெயர் வைக்கப்பட்டிருந்தது. தற்போது அதில் சிறிய திருத்தம் செய்து தீயவர் குலை நடுங்க என்று படத்தின் தலைப்பை மாற்றியுள்ளனர். அடுத்தது ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்த நிலையில் இந்த படம் நீண்ட நாட்களாக ரிலீஸ் செய்யப்படாமல் நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில் (வருகின்ற ஏப்ரல் 4) நாளை இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

MUST READ