spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஅர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராமின் 'போர்' .....ஆக்சன் பொறி பறக்கும் டீசர் வெளியீடு!

அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராமின் ‘போர்’ …..ஆக்சன் பொறி பறக்கும் டீசர் வெளியீடு!

-

- Advertisement -

அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராமின்  'போர்' .....ஆக்சன் பொறி பறக்கும் டீசர் வெளியீடு!இந்திய அளவில் மல்டி ஸ்டாரர் படங்கள் தான் இப்போது ட்ரெண்டிங்கில் உள்ளது. பல பெரிய ஹீரோக்கள் இணைந்து ஒரு படத்தில் நடித்து அதை இந்திய அளவில் பிரபலப்படுத்தி ஹிட் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முக்கிய நடிகர்களான அர்ஜுன் தாஸ் மற்றும் காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் இருவரும் இணைந்து “போர்” படத்தில் நடித்துள்ளனர். டேவிட், சோலோ போன்ற படங்களை இயக்கிய பிஜோய் நம்பியார் இப்படத்தை இயக்கியுள்ளார். பீஜோய் நம்பியார் பாலிவுட்டிலும் பல படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார். மேலும் பீட்சா உள்ளிட்ட சில படங்களை தயாரித்தும் உள்ளார்.

we-r-hiring

தற்போது போர் படத்தின் டீசர் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது. இதுவரை பெரும்பாலும் சாக்லேட் பாயாக நாம் பார்த்த காளிதாஸ் ஜெயராம் இதில் முழு ஆக்சன் ஹீரோவாக களமிறங்கியுள்ளார். அர்ஜுன் தாஸ் பேசினாலே போதும் நடிக்க கூட தேவையில்லை, அவருடைய குரல் மிரட்டலாகத் தான் இருக்கும். அவருக்கும் இது முழு நீள ஆக்சன் கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. படத்தில் இருவரும் மோதிக் கொள்ளும் காட்சிகள் ஹைலைட்டாக இருக்கும் எனத் தெரிகிறது. டீசரிலேயே ஆக்சன் ஏகத்துக்கும் இடம் பெற்றுள்ளது. படத்தின் ட்ரெய்லர் மற்றும் ரிலீஸ் தேதி அறிவிப்பு அடுத்தடுத்து வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ