spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாகுட்டி, சுட்டிகளுடன் ஆட்டம் போட்ட சிவகார்த்திகேயன், ரஹ்மான்!

குட்டி, சுட்டிகளுடன் ஆட்டம் போட்ட சிவகார்த்திகேயன், ரஹ்மான்!

-

- Advertisement -
அயலான் திரைப்படத்தின் விளம்பரத்திற்காக படத்தின் நாயகன் சிவகார்த்திகேயனும், இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் இணைந்து குட்டி சுட்டிகளுடன் ஆட்டம் போட்ட பாடல் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

நேற்று இன்று நாளை திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் இயக்குநர் ரவிகுமார். விஷ்ணு விஷால் நடித்திருந்த இத்திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அப்படத்தில் இடம்பெற்ற பாடல்களும் ஹிட் அடித்தன. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரவிக்குமார் சிவகார்த்திகேயனுடன் புதிய படத்தில் இணைந்தார். இப்படத்திற்கு அயலான் என தலைப்பு வைத்து படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடத்தி முடித்தனர். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 2020-ம் ஆண்டுக்குள் நிறைவு பெற்றது.

we-r-hiring
இருப்பினும் படத்தின் வெளியீடும், பட வேலைகளும் தொடர்ந்து தள்ளிப்போகின. அடுத்தடுத்து அயலான் படத்திற்கு பல சிக்கல்கள் வந்தன. இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ரகுல் ப்ரீத் சிங், கருணாகரன், யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருக்கிறார். இப்படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்டம் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன.

அயலான் திரைப்டம் நாளை திரையரங்குகளில் வௌியாக உள்ளது. இந்நிலையில், படத்தின் விளம்பரத்திற்காக, படத்தின் நாயகன் சிவகார்த்திகேயனும், இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் இணைந்து குட்டி சுட்டிகளுடன் ஆட்டம் போட்ட பாடலை படக்குழு வௌியிட்டுள்ளது. இப்பாடலை மகன் அமீனுடன் இணைந்து ரஹ்மான் பாடி இருக்கிறார்.

MUST READ