Homeசெய்திகள்சினிமாகேப்டன் மில்லருக்கு போட்டியாக களமிறங்கிய 'அயலான்'..... முதல் நாள் வசூல் எவ்வளவு?

கேப்டன் மில்லருக்கு போட்டியாக களமிறங்கிய ‘அயலான்’….. முதல் நாள் வசூல் எவ்வளவு?

-

- Advertisement -

கேப்டன் மில்லருக்கு போட்டியாக களமிறங்கிய 'அயலான்'..... முதல் நாள் வசூல் எவ்வளவு?சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அயலான் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. ஏலியன் ஒன்றை மையமாக வைத்து ஆர். ரவிக்குமார் இந்த படத்தை இயக்கியிருந்தார். ஐந்து வருடங்களாக கிடப்பில் கிடந்த அயலான் திரைப்படம் பல்வேறு தடைகளை தாண்டி நேற்று வெளியான நிலையில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. அந்த வகையில் சிவகார்த்திகேயனின் படங்கள் பெரும்பாலும் குடும்பங்கள் கொண்டாடும் விதமாக இருக்கும். அதைப் போன்று நகைச்சுவை கலந்த சயின்ஸ் பிக்சன் ஃபேண்டஸி கதைகளத்தில் வெளியான அயலான் திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அதன்படி பொங்கல் தினத்தை முன்னிட்டு கேப்டன் மில்லர், மெரி கிறிஸ்மஸ், மிஷன் உள்ளிட்ட படங்களுடன் கடும் போட்டியில் வெளியான அயர்லாந்து திரைப்படம் முதல் நாளில் ரூ. 5 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. எனவே இனிவரும் நாட்களிலும் அயலான் திரைப்படம் நல்ல வசூலை பெற்றுத்தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.கேப்டன் மில்லருக்கு போட்டியாக களமிறங்கிய 'அயலான்'..... முதல் நாள் வசூல் எவ்வளவு?

அயலான் படத்தில் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து யோகி பாபு, கருணாகரன், பால சரவணன், ரகுல் ப்ரீத் சிங், இஷா கோபிகர் மற்றும் பலர் நடித்துள்ளனர். கே. ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஏ.ஆர் ரகுமான் இதற்கு இசை அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ