spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவிமல் நடிப்பில் உருவாகும் தேசிங்கு ராஜா 2....அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

விமல் நடிப்பில் உருவாகும் தேசிங்கு ராஜா 2….அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

-

- Advertisement -

விமல் நடிப்பில் உருவாகும் தேசிங்கு ராஜா 2....அதிகாரப்பூர்வ அறிவிப்பு!இயக்குனர் எழில் இயக்கத்தில் விமல் நடிப்பில் 2013 ஆம் ஆண்டு வெளியான தேசிங்கு ராஜா திரைப்படம் நல்லதொரு நகைச்சுவைப் படமாக மாபெரும் வெற்றியைப் பதிவு செய்தது. படத்தில் நாயகியாக பிந்து மாதவி நடித்திருந்தார். சூரியும், ரவி மரியாவும் இணைந்து அடிக்கும் லூட்டிக்கு திரையரங்கமே சிரிப்பொலியில் நிரம்பியிருந்தது. இயக்குனர் எழில் தொடக்க காலத்தில் விஜய் நடிப்பில் துள்ளாத மனமும் துள்ளும், அஜித் நடிப்பில் வெளியான “பூவெல்லாம் உன் வாசம்”, பிரபுதேவா நடித்த “பெண்ணின் மனதை தொட்டு”,ஜெயம் ரவி நடிப்பில் வெளியான “தீபாவளி”, என மென்மையான படங்களை இயக்கியவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு சிவகார்த்திகேயனை வைத்து “மனம் கொத்தி பறவை” எனும் நகைச்சுவைப் படத்தை இயக்கி வெற்றியுடன் அடுத்த ரவுண்டுக்குத் தயாரானார். விமலும் அந்த காலகட்டத்தில் தொடர்ந்து நகைச்சுவைப் படங்களில் நடித்து வெற்றி கண்டார். இந்தக் கூட்டணி இணைந்த தேசிங்கு ராஜா திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இந்நிலையில் 11 வருடங்கள் கழித்து தற்போது தேசிங்கு ராஜா படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. விமல் நடிப்பில் உருவாகும் தேசிங்கு ராஜா 2....அதிகாரப்பூர்வ அறிவிப்பு!இப்படத்தில் விமலுக்கு ஜோடியாக பூஜிதா பொன்னாடா, ஹர்ஷிதா நடிக்கிறார்கள். மேலும் ரவி மரியா, சிங்கம் புலி, ரோபோ சங்கர், மதுரை முத்து உட்பட பெரிய நகைச்சுவை நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர். இன்ஃபினிட்டி கிரியேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. பிரபல இசையமைப்பாளர் வித்யாசாகர் இப்படத்துக்கு இசையமைக்கிறார். ஆர்.செல்வா ஒளிப்பதிவு செய்கிறார். தேசிங்கு ராஜா படத்தின் முதல் பாகத்திற்கும் தற்போது உருவாக இருக்கும் இரண்டாம் பாகத்திற்கும் கதையில் பெரிதாக எந்த தொடர்பும் இல்லை எனவும், இரண்டாம் பாகத்தில் கல்லூரியில் படிக்கும் நான்கு நண்பர்களைச் சுற்றி நடக்கும் கதையாக உருவாக்கப்பட்டுள்ளது எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

MUST READ