Homeசெய்திகள்சினிமாஅயோத்தி பட இயக்குனரின் அடுத்த படம் குறித்த அப்டேட்!

அயோத்தி பட இயக்குனரின் அடுத்த படம் குறித்த அப்டேட்!

-

அயோத்தி பட இயக்குனரின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அறிமுக இயக்குனரான மந்திரமூர்த்தி, சசிகுமார் நடிப்பில் ‘அயோத்தி’ திரைப்படத்தை இயக்கியிருந்தார். இப்படத்தில் சசிகுமாருடன் இணைந்து, ப்ரீத்தி அஸ்ராணி, குக் வித் கோமாளி புகழ், யஷ்பால் சர்மா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இப்படம் ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஏ ஆர் ரகுநந்தன் இசையமைத்திருந்தார். இந்த படம் கடந்த மார்ச் மாதம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் மந்திரமூர்த்தி தனது அடுத்த படத்தை நடிகை கங்கனா ரனாவத் நடிப்பில் இயக்க இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் இயக்குனர் மந்திரமூர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் ” எனது அடுத்த படத்தை பிரைடல் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தான் இயக்க இருக்கிறேன். ஆனால் நடிகை கங்கனா ரனாவத் நடிக்கும் படத்தை இயக்கவில்லை. நாங்கள் விரைவில் எங்களுடைய அடுத்த படம் குறித்து அறிவிப்போம்” என்று பதிவிட்டுள்ளார்.

MUST READ