spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஇன்வெஸ்டிகேஷன் திரில்லரில்..... பரத், ரகுமான் கூட்டணி!

இன்வெஸ்டிகேஷன் திரில்லரில்….. பரத், ரகுமான் கூட்டணி!

-

- Advertisement -

பரத் மற்றும் ரகுமான் கூட்டணியில் சமரா எனும் புதிய படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் சார்லஸ் ஜோசப் இயக்குகிறார். இப்படம் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் பரத் மற்றும் ரஹ்மானுடன் இணைந்து விவேக் பிரசன்னா, சோனாலி சூடன், சஞ்சனா திபு, ஸ்ரீலா லக்ஷ்மி, கோவிந்த் கிருஷ்ணா, ராகுல் மாதவ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

சமீபத்தில் இந்த படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பார்வை அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களுடைய நல்ல வரவேற்பு பெற்றது. பீக்காக் ஆர்ட் ஹவுஸ் நிறுவனம் படத்தை தயாரிக்க சினு சித்தார்த் ஒளிப்பதிவு செய்கிறார். தீபக் வாரியர் இசையமைக்கிறார். தமிழ், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாகி வரும் இந்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

MUST READ