போலா சங்கர் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
போலா சங்கர் திரைப்படமானது நடிகர் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகியுள்ளது. இந்த படம் கடந்த 2015 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக் ஆகும்.
போலா சங்கர் திரைப்படத்தில் அஜித்தின் கதாபாத்திரத்தில் சிரஞ்சீவி நடித்துள்ளார். லட்சுமி மேனன் கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். ஸ்ருதிஹாசன் கதாபாத்திரத்தில் தமன்னா நடித்துள்ளார். மெஹர் ரமேஷ் படத்தை இயக்கியுள்ளார்.ஏ கே என்டர்டைன்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க சாகர் மகதி இதற்கு இசை அமைத்துள்ளார். டட்லி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக நிறைவடைந்து டப்பிங் பணிகளும் தயாரிப்பு பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒரு மாஸ் என்டர்டைனர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களுடைய நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படம் வருகின்ற ஆகஸ்ட் 11ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. இந்த ட்ரெய்லரை நடிகர் ராம்சரண் வெளியிட்டுள்ளார். மிக மாஸ்ஸாவும் மிரட்டலாகவும் வெளியான இந்த டிரைலரில் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்துள்ளது. இந்த ட்ரெய்லர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது மட்டுமல்லாமல் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தியுள்ளது.