Homeசெய்திகள்சினிமாமீண்டும் தனுஷுடன் இணையும் வரலட்சுமி சரத்குமார்!

மீண்டும் தனுஷுடன் இணையும் வரலட்சுமி சரத்குமார்!

-

தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வருகின்ற டிசம்பர் 15ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதை தொடர்ந்து தனுஷ் தனது 50வது படத்தை தானே இயக்கி நடித்து வருகிறார். ஏற்கனவே கடந்த 2017 ஆம் ஆண்டில் ராஜ்கிரண் மற்றும் ரேவதி நடிப்பில் ப. பாண்டி திரைப்படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷ் இயக்கம் D50 திரைப்படத்தில் எஸ் ஜே சூர்யா, சந்திப் கிஷன், அபர்ணா பாலமுரளி, அனிகா சுரேந்திரன், காளிதாஸ் ஜெயராம், விஷ்ணு விஷால், துஷாரா விஜயன், செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் ஏ ஆர் ரகுமான் இசையிலும் இப்படம் உருவாகி வருகிறது. மேலும் இப்படம் ஹை பட்ஜெட்டில் ஒரு கேங்ஸ்டர் கதைக்களத்தில் தயாராகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் இடைவெளி இல்லாமல் ஒரே கட்டமாக சென்னையில் பிரமாண்டமான செட் அமைத்து நடத்தப்பட்டு வருகிறது. மேலும் அக்டோபர் மாதத்தில் படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து விடும் எனவும் கூறப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் WhatsApp செயலியில் பெற

இந்நிலையில் வரலட்சுமி சரத்குமார் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற புதிய தகவலும் வெளியாகி உள்ளது. எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான மாரி 2 திரைப்படத்தில் தனுஷ் உடன் இணைந்து வரலட்சுமி சரத்குமார் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ