அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துக் கொண்டிருக்கும் திரைப்படம் கேப்டன் மில்லர்.
இந்தப் படத்தில் பிரியங்கா மோகன், நிவேதிதா சதீஷ், சந்தீப் கிஷன், சிவராஜ் குமார், ஜான் கொகேன் உள்ளிட்ட ஒரு முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைக்கிறார்.
மேலும் இந்த படம் மூன்று பாகங்களாக உருவாகி வருகிறது.
இறுதி கட்ட படப்பிடிப்பை எட்டியுள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் வருகின்ற ஜூலை 28ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகிறது.

மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வரும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஜூன் 30 இல் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நாளை மாலை 5 மணி அளவில் வெளியாகும் என்று படக்குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.


