Homeசெய்திகள்சினிமாநடிகர் சிவகார்த்திகேயனின் புதிய பரிமாணம்: தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் அதிகாரப்பூர்வ பாடலாசிரியராக இணைப்பு!

நடிகர் சிவகார்த்திகேயனின் புதிய பரிமாணம்: தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் அதிகாரப்பூர்வ பாடலாசிரியராக இணைப்பு!

-

- Advertisement -

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராகவும், தயாரிப்பாளராகவும் வலம்வரும் சிவகார்த்திகேயன், தற்போது தனது பன்முகத் திறமையை மேலும் விரிவுபடுத்தியுள்ளார். ஏற்கனவே பல வெற்றிப் பாடல்களை எழுதியுள்ள அவர், தற்போது தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் (South Indian Film Writers Association) அதிகாரப்பூர்வப் பாடலாசிரியராகத் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.நடிகர் சிவகார்த்திகேயனின் புதிய பரிமாணம்: தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் அதிகாரப்பூர்வ பாடலாசிரியராக இணைப்பு!

பாடலாசிரியராகப் பரிணமித்த நடிகர்
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பைத் தாண்டி மிமிக்ரி, தொகுப்பாளர், பாடகர் மற்றும் தயாரிப்பாளர் எனப் பல்வேறு துறைகளில் முத்திரை பதித்துள்ளார். சிவகார்த்திகேயன் தனது படங்களில் மட்டுமல்லாமல் பல படங்களுக்குத் துள்ளலான மற்றும் அர்த்தமுள்ள வரிகளைக் கொண்ட பாடல்களை எழுதி ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். அவரது வரிகளில் உருவான பல பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்துள்ளன. இந்நிலையில், திரைத்துறையில் பாடலாசிரியராகத் தனது பங்களிப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், அவர் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் உறுப்பினராக இணைந்துள்ளார். இது அவருக்குத் திரையுலகினர் மத்தியில் மேலும் பல பாராட்டுக்களைப் பெற்றுத் தந்துள்ளது.

we-r-hiring

திரைத்துறையினர் வரவேற்பு
முன்னணி நடிகராகத் தொடரும் நிலையிலும், தனது எழுத்துார்வத்தை விடாமல் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் ஓர் எழுத்தாளராகவும் பாடலாசிரியராகவும் அவர் தன்னைப் பதிவு செய்துள்ளது இளம் கலைஞர்கள் பலருக்கும் ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது. சங்கத்தில் இணைந்துள்ள சிவகார்த்திகேயனுக்குத் திரையுலக நண்பர்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்கள் வாயிலாகத் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

‘ஜெயிலர் 2’ படத்தில் இணைந்த வித்யா பாலன்: மிரட்டலான வில்லி கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

MUST READ