spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாகார்த்தியின் 'சர்தார் 2' படத்தில் இணைந்த தனுஷ் பட நடிகை!

கார்த்தியின் ‘சர்தார் 2’ படத்தில் இணைந்த தனுஷ் பட நடிகை!

-

- Advertisement -

சர்தார் 2 படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.கார்த்தியின் 'சர்தார் 2' படத்தில் இணைந்த தனுஷ் பட நடிகை!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் கார்த்தி தற்போது வா வாத்தியார், மெய்யழகன், கங்குவா ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையில் கடந்த 2022-ல் கார்த்தி நடிப்பில் பி எஸ் மித்ரன் இயக்கியிருந்த திரைப்படம் தான் சர்தார். இந்த படத்தில் கார்த்தியுடன் இணைந்து ராஷி கண்ணா, லைலா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். கார்த்தியின் 'சர்தார் 2' படத்தில் இணைந்த தனுஷ் பட நடிகை!ஸ்பை த்ரில்லர் கதைகளத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. அதைத்தொடர்ந்து பி எஸ் மித்ரன் சர்தார் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கி வருகிறார். சர்தார் 2 என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் கார்த்தி கதாநாயகனாக நடிக்க எஸ் ஜே சூர்யா வில்லனாக நடிக்க உள்ளார். மேலும் நடிகை மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத் ஆகியோரும் படத்தில் இணைந்துள்ளனர். இந்நிலையில் மேலும் ஒரு நடிகை படத்தில் இணைந்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். கார்த்தியின் 'சர்தார் 2' படத்தில் இணைந்த தனுஷ் பட நடிகை!அதாவது தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படத்தில் நடித்திருந்த ரஜிஷா விஜயன் சர்தார் 2 திரைப்படத்தில் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே சர்தார் முதல் பாகத்திலும் நடித்திருந்தார்.
சர்தார் 2 திரைப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்பதும் படத்தின் படப்பிடிப்பு வருகின்ற ஆகஸ்ட் 18 அன்று சென்னையில் தொடங்க இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

MUST READ