நடிகர் தனுஷ் கேப்டன் மில்லர் படத்திற்கு பிறகு ராயன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படமானது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. அதே சமயம் நடிகர் தனுஷ் குபேரா எனும் திரைப்படத்தின் நடித்து வருகிறார். தனுஷின் 51வது படமான இந்த படத்தை இயக்குனர் சேகர் கம்முலா இயக்கி வருகிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைக்கிறார். தனுஷுடன் இணைந்து நாகார்ஜுனா, ராஷ்மிகா உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். ஏற்கனவே இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் ஏற்கனவே இந்த படத்தில் தனுஷ் மற்றும் நாகார்ஜுனா ஆகியோரின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படமானது திருப்பதி, மும்பை போன்ற இடங்களில் ஏற்கனவே படமாக்கப்பட்டுள்ளது. இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.
#Kubera shooting spot video👌🎥
Currently the combination Action portions of #Dhanush & #Nagarjuna are under shoot in Hyderabad👊🏼💥pic.twitter.com/bdy9r9MxuL
— AmuthaBharathi (@CinemaWithAB) June 5, 2024
இதில் ஆக்சன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகவும் தனுஷ் மற்றும் நாகார்ஜுனா இந்த படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. குபேரா திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா அளவில் வெளியாக இருக்கிறது என்பதை குறிப்பிடப்பட்டது.