Homeசெய்திகள்சினிமா'கிங் ஆஃப் கோத்தா' படத்தில் கேமியோ ரோலில் நடிக்கும் கோலிவுட் இளம் நடிகர்!

‘கிங் ஆஃப் கோத்தா’ படத்தில் கேமியோ ரோலில் நடிக்கும் கோலிவுட் இளம் நடிகர்!

-

துல்கர் சல்மான் நடிப்பில் கிங் ஆஃப் கோத்தா திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை அபிலாஷ் ஜோஷி இயக்கியுள்ளார். இந்த படத்தில் துல்கர் சல்மான் உடன் இணைந்து ஐஸ்வர்யா லட்சுமி ரித்திகா சிங், பிரசன்னா, அனிகா சுரேந்திரன் ,சபீர் கல்லாரக்கல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வேஃப்பரர் ஸ்டுடியோஸ் நிறுவனமும் ஜி ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. ஜேக்ஸ் பிஜாய் மற்றும் கிலாடி வி ஆபிரகாம் இணைந்து படத்திற்கு இசையமைத்துள்ளனர்.

இந்த படம் வருகின்ற ஆகஸ்ட் 24ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம், உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கிறது. அதற்காக முழுவீச்சில் தயாராகி வருகிறது. துல்கர் சல்மானும் புரொடக்ஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். படத்தின் டீஸர் மற்றும் டிரெய்லர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் துருவ் விக்ரம் கேமியோ ரோலில் நடித்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. சிறிது நேரமாக இருந்தாலும் அவரின் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசக்கூடியதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

MUST READ