spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாகவின் நடிப்பில் வெளியான 'ஸ்டார்' படத்தை பாராட்டிய நெல்சன்!

கவின் நடிப்பில் வெளியான ‘ஸ்டார்’ படத்தை பாராட்டிய நெல்சன்!

-

- Advertisement -

கவின் நடிப்பில் வெளியான ஸ்டார் படத்தை பிரபல இயக்குனர் நெல்சன் திலீப்குமார் பாராட்டியுள்ளார்.கவின் நடிப்பில் வெளியான 'ஸ்டார்' படத்தை பாராட்டிய நெல்சன்!

நடிகர் கவின் டாடா படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் கவின் நடிப்பில் உருவாகி இருந்த ஸ்டார் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. இந்த படம் டாடா படத்தைப் போலவே கவினுக்கு நல்ல பெயரையும் புகழையும் பெற்று தந்தது. மீண்டும் ஒருமுறை ஸ்டார் என்பதை ஸ்டார் படத்தின் மூலம் நிரூபித்துள்ளார் நடிகர் கவின்.கவின் நடிப்பில் வெளியான 'ஸ்டார்' படத்தை பாராட்டிய நெல்சன்! இப்படத்தை ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்திருந்த நிலையில் பியார் பிரேமா காதல் படத்தின் மூலம் பிரபலமான இளன் இயக்கி இருந்தார். இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் இன்று வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்ற வருவது மட்டுமல்லாமல் பல்வேறு தரப்பினரிடையை பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

we-r-hiring

அந்த வகையில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் தனது சமூக வலைதள பக்கத்தில், “ஸ்டார் திரைப்படம் மிகவும் அருமையாக உள்ளது. இளன் படத்தை சிறப்பாக எழுதியுள்ளார். கவின் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி திரையில் மிரட்டி இருக்கிறார். யுவன் சங்கர் ராஜா அருமையாக இசையமைத்திருக்கிறார். படம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுக்க படக்குழுவுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் நெல்சன் திலீப்குமார் தயாரிப்பில் நடிகர் கவின் பிளடி பெக்கர் எனும் திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ