இயக்குனர் சங்கர், நடிகர் விஜயின் அரசியல் பிரவேசம் குறித்து பேசி உள்ளார்.தளபதி என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் விஜய் தற்போது ஒரு நடிகராக மட்டுமல்லாமல் ஒரு அரசியல்வாதியாகவும் வலம் வருகிறார். அந்த வகையில் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிட இருக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் முதல் மாநாட்டையும் வெற்றிகரமாக நடத்தி முடித்தார் விஜய். மேலும் விஜயின் அரசியல் வருகைக்கு பலரும் தங்களின் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். அதன்படி பிரபல இயக்குனர் சங்கரிடம் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் விஜயின் அரசியல் வருகை குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். விஜய் வந்து நல்ல காரியங்களை செய்தால் மகிழ்ச்சியாக இருக்கும். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இயக்குனர் சங்கரின் இயக்கத்தில் நடிகர் விஜய், நண்பன் திரைப்படத்தில் பணியாற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்தது இயக்குனர் சங்கர் தற்போது கேம் சேஞ்சர் எனும் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் ராம்சரண், எஸ்.ஜே. சூர்யா, கியாரா அத்வானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். அரசியல் தொடர்பான கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த படம் 2025 ஜனவரி 10ஆம் தேதி பொங்கல் தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.