Homeசெய்திகள்சினிமாபம்பரமாய் சுற்றும் தனுஷ்..... 'ராயன்' ஆடியோ லாஞ்சை முடித்த பின் என்ன செய்தார் தெரியுமா?

பம்பரமாய் சுற்றும் தனுஷ்….. ‘ராயன்’ ஆடியோ லாஞ்சை முடித்த பின் என்ன செய்தார் தெரியுமா?

-

- Advertisement -

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர். அதே சமயம் இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் பாலிவுட், ஹாலிவுட் ஆகிய மொழி படங்களில் நடித்து எல்லை தாண்டி சாதனை படைத்து வருகிறார். பம்பரமாய் சுற்றும் தனுஷ்..... 'ராயன்' ஆடியோ லாஞ்சை முடித்த பின் என்ன செய்தார் தெரியுமா?இவர் கேப்டன் மில்லர் படத்திற்கு பிறகு ராயன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். தனுஷின் ஐம்பதாவது படமான இந்த படத்தை தனுஷே இயக்கியுள்ளார். இந்த படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா கடந்த ஜூன் 6-ம் தேதி சென்னையில் நடைபெற்றது. மேலும் ராயன் திரைப்படமானது வருகின்ற ஜூலை 26 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக முழு வீச்சில் தயாராகி வருகிறது. இதற்கிடையில் நடிகர் தனுஷ் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் எனும் திரைப்படத்தையும் இயக்குகிறார். அத்துடன் தனது 51 வது படமான குபேரா திரைப்படத்திலும் மும்மரமாக நடித்து வருகிறார்.

இதன் படப்பிடிப்பு மும்பை, ஐதராபாத் போன்ற பகுதிகளில் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் தனுஷ் ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழாவை முடித்துவிட்டு மீண்டும் குபேரா படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஐதராபாத் சென்றுள்ளார். அப்போது விமான நிலையத்தில் நடிகர் தனுஷ் வேகமாக நடந்து செல்லும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. தனுஷ் சினிமாவில் முழு அர்ப்பணிப்புடன் பம்பரமாய் சுற்றித்திரிகிறார் என்று ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

MUST READ