கிங் ஆஃப் கோத்தா படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் ஆகியுள்ளது.
துல்கர் சல்மான் நடிப்பில் கிங் ஆஃப் கோத்தா திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை அபிலாஷ் ஜோஷி இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் துல்கர் சல்மான் உடன் இணைந்து ஐஸ்வர்யா லட்சுமி ரித்திகா சிங், பிரசன்னா, அனிகா சுரேந்திரன் ,சபீர் கல்லாரக்கல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வேஃப்பரர் ஸ்டுடியோஸ் நிறுவனமம் ஜி ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. ஜேக்ஸ் பிஜாய் மற்றும் கிலாடி வி ஆபிரகாம் இணைந்து படத்திற்கு இசையமைத்துள்ளனர்.
இந்த படம் வருகின்ற ஓணம் பண்டிகையை முன்னிட்டு வருகின்ற ஆகஸ்ட் 25ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம், உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கிறது.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் சமீபத்தில் இந்த படத்தின் டீசர் மற்றும் முதல் பாடல் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகி ரசிகர்களுடைய நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
This looks like a bloody good blast! Presenting the #KOKTrailer Dear brother @dulQuer All the very best to you and the team!https://t.co/dmYvXbiKXC
— Suriya Sivakumar (@Suriya_offl) August 10, 2023
மிரட்டலான பின்னணி இசையில் வெளியாகி உள்ள இந்த டைலரிங் மூலம் இது ஒரு கேங்ஸ்டர் படமாக உருவாகியுள்ளது என்பது தெரியவந்துள்ளது. கோத்தா என்னும் இடத்தில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த ட்ரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.