Homeசெய்திகள்சினிமாபுதிய வெப் சீரிஸில் துல்கர் சல்மான்..... ட்ரெய்லர் ரிலீஸ் தேதி அப்டேட்!

புதிய வெப் சீரிஸில் துல்கர் சல்மான்….. ட்ரெய்லர் ரிலீஸ் தேதி அப்டேட்!

-

துல்கர் சல்மான் அடித்துள்ள வெப் தொடரின் ட்ரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

மலையாளத் திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் துல்கர் சல்மான். இவர் தற்போது பான் இந்தியா நடிகராக உருவெடுத்துள்ளார். இவரின் பெரும்பாலான படங்கள் இவருக்கு வெற்றி படங்களாகவே அமைகின்றன. அந்த வகையில் சீதாராமம் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து அபிலாஷ் ஜோசிய இயக்கத்தில் கிங் ஆப் கோத்தா திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகின்ற ஓணம் பண்டிகைக்கு திரைக்கு வர இருக்கிறது. இதன் பிறகு தனது அடுத்த படத்தை இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.

இதற்கிடையில் துல்கர் சல்மான் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்திற்காக வெப் தொடர் ஒன்றில் நடித்துள்ளார். இவர் வெப் தொடரில் நடிப்பது இதுவே முதன் முறையாகும்.
‘கன்ஸ் அண்ட் குலாப்ஸ்’ என்று இந்த வெப் தொடருக்கு தலைப்பிடப்பட்டுள்ளது. இதில் துல்கர் சல்மான் உடன் இணைந்து ராஜ்குமார் ராவ், ஆதர்ஷ் கௌரவ், டிஜே பானு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதனை பேமிலி மேன் என்ற வெப் தொடரின் மூலம் பிரபலமான ராஜ் மற்றும் டி கே இணைந்து இயக்கியுள்ளனர்.

கிரைம் திரில்லரில் போதை பொருள் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த வெப் தொடர் வருகின்ற ஆகஸ்ட் 18ஆம் தேதி நெட்பிலிக்சில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இதன் ட்ரெய்லர் வருகின்ற ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாகும் என்று வீடியோ ஒன்று வெளியிடப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ