Homeசெய்திகள்சினிமாதுல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர்... வெளியானது டீசர்...

துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர்… வெளியானது டீசர்…

-

துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி இருக்கும் லக்கி பாஸ்கர் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

துல்கர் சல்மான் சீதாராமம் திரைப்படத்திற்கு பிறகு தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இறுதியாக அவரது நடிப்பில் வெளியான திரைப்படம் கிங் ஆப் கோத்தா. இத்திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இதைத் தொடர்ந்து, காந்தா உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். அந்த வரிசையில் வாத்தி பட இயக்குனர் வெங்கி அட்லுரியின் இயக்கத்தில் நடித்துள்ளார்.

இது சம்பந்தமான அறிவிப்பு ஏற்கனவே போஸ்டர் உடன் வெளியானது. மேலும், படப்பிப்பும் பூஜையுடன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. படத்தின் பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் ஃபார்ச்சூன் போர் சினிமாஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இதில் துல்கர் சல்மான் உடன் இணைந்து மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். ஜிவி பிரகாஷ் இதற்கு இசை அமைக்கிறார்.

இந்நிலையில், லக்கி பாஸ்கர் படத்தின் டீசர் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. விரைவில் படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ