Homeசெய்திகள்சினிமாரஜினியின் வேட்டையன் திரைப்படம்... குத்து பாட்டுக்கு ரெடியான துஷாரா விஜயன்... ரஜினியின் வேட்டையன் திரைப்படம்… குத்து பாட்டுக்கு ரெடியான துஷாரா விஜயன்…
- Advertisement -
ரஜினி நடிப்பில் உருவாகும் வேட்டையன் படத்தில் நடிகை துஷாரா விஜயன் குத்து பாட்டுக்கு நடனமாடுவதாக கூறப்படுகிறது.

கோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படம் சுமார் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனையும் படைத்து. இதைத் தொடர்ந்து அவர் நடித்து வரும் அடுத்த திரைப்படம் வேட்டையன். இது ரஜினிகாந்தின் 170-வது படமாகும். இதில், ரஜினியுடன் சேர்ந்து அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ரித்திகா சிங், ராணா, மஞ்சு வாரியார், துஷாரா விஜயன் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜெய் பீம் பட இயக்குநர் ஞானவேல் இப்படத்தை இயக்குகிறார்.

படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். மேலும், இப்படத்திற்கு வேட்டையன் என தலைப்பு வைத்து அண்மையில் படக்குழு அறிவித்திருந்தது. லைகா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நெல்லை, அதையடுத்து திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் நடைபெற்றது. அடுத்தகட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்றது. அங்கு ரஜினி மற்றும் அமிதாப் பச்சன் பங்கு பெறும் காட்சிகள் படம் பிடிக்கப்பட்டன. தற்போது ஒரு இடைவெளிக்கு பிறகு தூத்துக்குடியில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் துஷாரா விஜயன், படத்தில் குத்து பாடலுக்கு நடனம் ஆட உள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் அடுத்தடுத்து அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.